/tamil-ie/media/media_files/uploads/2019/09/Bigg-Boss-Tamil-3-15.jpg)
Bigg Boss Tamil 3 Promo Today
Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டங்களை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி 100 நாட்களைத் தொட இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்நிலையில் இன்றைய மூன்று ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
அதில் முதல் ப்ரோமோவில், ”ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம்” என கவின் பாடுகிறார். ஷெரின் எழுதி கிழித்துப்போட்ட லெட்டரை குப்பைத் தொட்டியை கிளறி, பேப்பர்களை ஒட்ட வைத்து தர்ஷனும் முகெனும் படிக்கிறார்கள். “முதலில் கடிதத்தை உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் பின் மனம் மாறிவிட்டது” என்று ஷெரின் கூற, ”ஏன் மாறியது” என்று கேட்கிறார் தர்ஷன். சாண்டி இதைப் பார்த்து கிண்டல் செய்கிறார்.
அடுத்த ப்ரோமோவில் பிக் பாஸ் 2-வது சீசனின் போட்டியாளர்கள் ஜனனியும், ரித்விகாவும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். கடந்த சீசனைப் போலவே வாய் திறக்காமல் இருக்கிறார் ரித்விகா. ஜனனி மட்டும் போட்டியாளர்களிடம் பேசுகிறார். ”தர்ஷனோட ரோல் மாறாம அப்படியே ட்ராவல் ஆகிட்டு இருக்கீங்க. இது பெரிய விஷயம். கவின், அடி வாங்குனது நான் தான், அதனால கோப்பை எனக்கு தான். உங்க கதைல நீங்க தான் ஹீரோ, நீங்க தான் வில்லன்” என்கிறார்.
மூன்றாவது ப்ரோமோ-வில் “உங்களில் ஒருவர் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று ரூபாய் 50 லட்சத்தைப் பெற முடியும். இதனிடையே ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு, உடனடியாக இந்த வீட்டை வெளியேறும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது” என பிக் பாஸ் அறிவிக்க, அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அப்போது கவின் எழுந்து நிற்கிறார். அவரை தடுக்கும் விதமாக சாண்டியும், லாஸ்லியாவும் பேசுகிறார்கள். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவைச் சேர்ந்தவர் நமக்கு அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, வீட்டை விட்டு கவின் வெளியேறியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.