’என்னோட 3 வருஷ ரிலேஷன்ஷிப்…’ – லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கிய கவின்!

கூத்து பாக்க வந்திருக்கவங்களுக்கு ‘வந்தனம்’ என சேரன் பாடி ஆடுகிறார், ‘எமதர்மராஜா’ வந்துட்டேன், என வனிதா கூறுகிறார்.

Bigg Boss Tamil 3 Promo
Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3 புரொமோக்களும் வெளியாகியுள்ளன. நேற்றே பிக்பாஸ் வீடு கிராமமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் அது தொடர்கிறது.

முதல் புரொமோவில், பாரம்பரிய கூத்துக் கலைஞர்களுடன் போட்டியாளர்கள் தலா 4 பேர் வீதம் பிரிந்து, கூத்தில் பங்கெடுக்கிறார்கள். கூத்து பாக்க வந்திருக்கவங்களுக்கு ‘வந்தனம்’ என சேரன் பாடி ஆடுகிறார், ‘எமதர்மராஜா’ வந்துட்டேன், என வனிதா கூறுகிறார்.

இரண்டாவது புரொமோவில் தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் கூத்துக் கலைஞர்கள் நடிப்புப் பயிற்சி தருகிறார்கள். ”அந்நிய நாட்டுக்காரன் நம் மீது போர் புரிய வந்திருக்கிறான்” என தர்ஷன் கூற, “அப்படியா சுவாமி” என அதிர்ச்சியாகிறார் ஷெரீன். இதை மற்ற போட்டியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ”மன்னா நீங்கள் போகத்தான் வேண்டுமா” என ஷெரின் கேட்கிறார், பிறகு கூத்து கலைஞர் வசனத்தைக் கூற அனைவரும் சிரிக்கிறார்கள்.

மூன்றாவது புரொமோவில் வழக்கம் போல லாஸ்லியா கவினை காட்டி விட்டார்கள். ”நான் ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். நான் ஃபர்ஸ்ட் 3 இயர்ஸ் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தேன். டோட்டலா எதுவும் வேணாம்ன்னு சொல்லிட்டு அவங்க போய்ட்டாங்க. இது இதுல இருந்து பழசு, எல்லாத்தையும் கனெக்ட் பண்ணி தான் நான் இங்க வந்தேன். இதுக்கு அப்புறம் நீயே யோசிச்சுக்கோ” என கவின் லாஸ்லியாவிடம் கூற, சோகமாய் முகத்தை வைத்திருக்கிறார் லாஸ்லியா.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 promo kavin losliya 28 08 19 cheran vanitha

Next Story
‘அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகம் தயாராகிவிட்டது’ – விஜய் அம்மா கடிதம்Tamil Nadu News today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com