Bigg Boss Tamil 3 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு இந்நிகழ்ச்சியின் மூன்று ப்ரோமோக்கள் வெளியாகும். இந்நிலையில் இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
முதல் ப்ரோமோவில், ‘எல்லாரும் ஃப்ரீஸ்’ என்கிறார் பிக் பாஸ். அப்போது முகெனின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார். ஓடிச் சென்று அவரை கட்டியணைத்துக் கொள்ளும் முகென், கண்ணீர் விடுகிறார், கூடவே சேர்ந்து அவரின் அம்மாவும் அழுகிறார். அவர்கள் அழுவதை சீக்ரெட் ரூமில் இருக்கும் சேரன் பார்த்து, உணர்ச்சி வசப்படுகிறார். பின்னர் முகெனின் தங்கை வீட்டுக்குள் இருந்து வருகிறார். “இதான் என் தங்கச்சி” என மகிழ்ச்சியாகக் கூறும் முகென், அவரை அங்கும் இங்கும் கூட்டிச் செல்ல, “பாரு.. தங்கச்சிய பாத்ததும், அம்மாவ மறந்துட்ட..?” என்கிறார்.
Advertisment
Advertisements
அடுத்த ப்ரோமோவில், கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய 5 பேரும் காபி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். “ஏ எல்லாரும் காபி குடிச்சோன வா” என லாஸ்லியா கூற, “நீங்க கேப்டனா இருக்கும் போது மட்டும், காபி குடிச்சதும் உடனே போய்டலாம், அத போய்டலாம்ன்னு கூப்பிடுறீங்க” என சாண்டி கூற, “எக்ஸ்க்யூஸ்மி என் வேலைய நான் கரெக்ட்டா செஞ்சேன் ஓகே” என லாஸ்லியா சொல்கிறார். “இந்த மாதிரி ஒருநாளும் காபி குடிச்சதும் போகலாம்ன்னு சொன்னதில்லையே” என சாண்டி கூற, ”நீங்க வர தேவையில்லை, விட்டுடுங்க ப்ளீஸ்” என அங்கிருந்து செல்கிறார் லாஸ்லியா.”என்ன சீரியஸாகிட்டியா லாஸு” என சாண்டி கேட்கிறார். “ஜாலி ஜாலின்னு நீ பாட்டுக்கு ஹர்ட் பண்ணிடுற” என லாஸ்லியாவுக்காக, சாண்டியிடம் ஆஜராகிறார் கவின்.
மூன்றாவது ப்ரோமோவில், சேரன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் படிக்கிறார் தர்ஷன். அதில், “கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி. அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்களது விருப்பங்களை வெளியில் வந்து பேசிக் கொள்ளலாம். இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று. அப்படியிருந்தும், லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா? செலிப்ரேட் பண்ணலாம் என நீங்கள் அவரை தூண்டுவது ரொம்ப தவறாக உள்ளது. ஸ்டாப் பண்ணுவீங்களா” என எழுதப்பட்டிருக்கிறது. இதனை சேரன் ரகசிய அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.