Bigg boss Tamil 3 promo : பிக் பாஸ் இல்லத்தில் வர வர கவின் லாஸ்லியா அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இருவரும் செய்யும் அட்டாகசங்கள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை இவர்களின் நண்பர்கள் கூட்டம் கவனிக்க தொடங்கி விட்டது. கலாய்க்கும் பஞ்சமில்லை.
Bigg boss Tamil promo: பிக் பாஸ் இல்லம் இப்போது சண்டைக்கு எல்லாம் ஓய்வு கொடுத்து விட்டு போட்டியில் இறங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக கவின் வேற மாறி பார்க்க போறீங்க எல்லாம் வீர வசனங்களை பேசினார். என்ன மாதிரி என்பது இப்போது வரை தெரியவில்லை. கிராமத்து களமாக மாறியிருக்கும் பிக் பாஸ் இல்லத்தில் நேற்று பொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியவை நடந்தன. அதனை தொடர்ந்து இன்று பாட்டு கச்சேரி நடைபெற இருக்கிறது. இதில் கவினை வச்சி செய்கிறார் சாண்டி. காதல் மன்னன் கவின் என சாண்டியும், முகெனும் கவினுக்காக பாடல் ஒன்றையும் டெடிகெட் செய்கிறார்கள்.
Bigg boss today promo :
இரண்டாவது புரமோவில் அசடு வழிகிறார் கவின்.கேமராவிடம் சென்று லேடிஸ் சேவ்ட்டி பின் கேட்கிறார்கள் என்கிறார் கவின். அதற்கு சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் லேடிஸ் இல்லை ஒரே பெண் லாஸ்லியா என கலாய்த்து தள்ளுகின்றனர். உடனே வெட்கப்பட்டு அங்கிருந்து நைசாக நழுவுகிறார் கவின். இதையெல்லாம் பெட்ரோமில் அமர்ந்தப்படி பார்த்து ரசிக்கிறார் லாஸ்லியா
Bigg boss promo today :
மூன்றாவது ப்ரமோவில் தான் ட்விஸ்ட். யாரும் எதிர்பார்க்காத படி, தர்ஷனை வைத்து செய்கிறார் சாண்டி. பாட்டு கச்சேரியில் முதலில் கவினை ஓட்டியவர் அடுத்து தர்ஷனுக்காக மேடி, மேடி சாங் பாடுகிறார். அதுவும் ஷெரீனை வைத்து.