Advertisment

பிக்பாஸ் ப்ரோமோ: என்னது லாஸ்லியா பச்சோந்தியா?

Bigg Boss Tamil: இது ‘பச்சோந்தி’ அவார்ட், திஸ் அவார்ட் கோஸ் டூ லாஸ்லியா” என வைத்யா சொல்ல, லாஸ்லியாவின் முகம் மாறி கோபம் கொப்பளிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 promo

Bigg Boss Tamil 3 promo

Bigg Boss Tamil 3 Promo: பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் விருது விழா நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. விருந்தினர்களாக வீட்டிற்கு சென்றுள்ள மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்கள்.

Advertisment

இதில் முதலாவதாக, “இது ‘பச்சோந்தி’ அவார்ட், திஸ் அவார்ட் கோஸ் டூ லாஸ்லியா” என வைத்யா சொல்ல, லாஸ்லியாவின் முகம் மாறி கோபம் கொப்பளிக்கிறது. இதை சாக்‌ஷியிடமிருந்து வாங்கிய லாஸ்லியா, அதை மேடை மீது எறிந்து விட்டு, “எனக்கு இது வேணாம், ஸோ இத நீங்களே வச்சுக்கோங்க” என்கிறார். “உனக்கு வேணாம்ன்னா அத கொண்டு போய் வெளில எறி, இங்க ஏன் போடுற” என வைத்யா கேட்க, “நா இங்க தான் போடுவேன்” என்கிறார் லாஸ்லியா. ”நான் கொடுத்தத போட்டுட்டு போறாங்க, அப்போ ஏன் நான் அவார்ட் கொடுக்கனும், அதனால நானும் கொடுக்க மாட்டேன்” என சாக்‌ஷி மேடையை விட்டு கீழிறங்குகிறார். ”ஒரு ஜட்ஜுக்கு ரெஸ்பெக்ட் இல்ல, பெரியவங்களுக்கு மரியாதை இல்லன்னா, என்ன நடந்துட்டு இருக்கு இங்க” என சாக்‌ஷி கேட்க, “என்னால வாங்க முடியாது” என்கிறார் லாஸ்லியா.

இரண்டாவது ப்ரோமோவில், ”எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைய நாங்க செய்றோம். அது பிடிக்கலைன்னா அத போய் அங்க போடட்டும்” என வைத்யா சொல்ல, “கொஞ்சம் கூட மரியாதை இல்ல” என்கிறார் சாக்‌ஷி. அதற்கு, “நீங்க எனக்கு டீச் பண்ணாதீங்க” என்கிறார் லாஸ்லியா, “நான் உன்கிட்ட பேசல” என சாக்‌ஷி சொல்ல, ”ஹலோ எக்ஸ்க்யூஸ்மி நீங்க என்ன பத்தி தான் பேசுறீங்க” என்கிறார் லாஸ்லியா. ”நான் உன் கிட்டயா பேசுறேன், கேமராவுல தான் பேசுறேன், நீ தான் எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ற” என சாக்‌ஷி சொல்ல, “ஹலோ நீ, வா, போன்னு கூப்பிடாதீங்க” என்கிறார் லாஸ்லியா. “உனக்கு மட்டும் வயசுக்கு மரியாதை கொடுக்க தெரியுதா?” என்கிறார் சாக்‌ஷி.

ஆக மொத்தம் இன்றைய நிகழ்ச்சியில் நிறைய கண்டெண்ட் இருக்கிறது போல...

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment