Bigg Boss Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று பார்க்கலாமா வேண்டாமா என அன்றைய புரோமோக்கள் தான் தீர்மானிக்கும். புரோமோவில் ஒரு ‘ஃபயர்’ இருந்தால் தான், அன்றைய நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கும்.
Advertisment
அந்த வகையில், இன்றைக்கு வந்த முதல் பிக்பாஸ் புரோமோவில் வனிதாவுடன் சண்டைப் போடுகிறார் ஷெரின். ”என் கண்ணுக்கு முன்னாடி ஒரு அஃபைர் நடந்துட்டு இருக்கு” என வனிதா சாக்ஷியிடம் சொல்ல, கோபமான ஷெரின், “உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா இப்படி சொல்லுவ. தெரியாம எதையும் பேசாத. என்னோட ரிலேஷன்ஷிப்பை பத்தி பேச உனக்கு உரிமை இல்ல. கொஞ்சம் கூட காமன் சென்ஸ் இல்லையா” என்றவாறு தர்ஷனை நோக்கி, “ஏய் நா என்னடா பண்ணிருக்கேன் உனக்கு” என்று கோபமாகக் கேட்பது போல் உள்ளது.
Advertisment
Advertisements
அடுத்து வந்த புரோமோவில், சேரனிடம் தனது வருத்தத்தைக் கூறி கதறி அழுகிறார் ஷெரின். ”அத அஃபைர்ன்னு சொல்றாங்க சார், எப்படி சார் நான் சும்மா இருக்க முடியும். எனக்கு அந்த பையனை பாக்கவும் வேண்டாம், அவன் சைடுல நான் போகவும் மாட்டேன். அந்த மாதிரி வார்த்தைய யூஸ் பண்ணினது எனக்கு புரியல சார். வேற யாராச்சும் சொல்லிருந்தா கூட தெரியாது. அவங்க என் ஃபிரெண்டா இருந்துட்டு இப்படி சொல்லிட்டாங்க சார். எனக்கு வனிதா கூடவும் பேச வேண்டாம், தர்ஷன் கூடவும் பேச வேண்டாம். இந்த வீட்ல யார் கூடவும் பேச வேண்டாம் சார்” என அழுகிறார்.
இத்தனை நாள் ஒவ்வொருத்தரையாக சண்டைக்கு இழுத்துக் கொண்டிருந்த வனிதா, இன்று ஃப்ரெண்டு என்று கூட பார்க்காமல் ஷெரினுடன் பிரச்னையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
Bigg Boss Promo 3:
வனிதா டைனிங் ஆலில் மீட்டிங் போட, இதுவரை கோப படாத சேரனே கோபப்பட்டு விட்டார். பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் வனிதாவிற்காக சேரில் அமர்ந்துக் கொண்டு பிரச்சனை பற்றி கேட்கிறார்கள். இதற்கு சாண்டி இதைப்பற்றி நீங்கள் பேச வேண்டும் என்றால் தனியாக பேசி இருக்கலாமே என்கிறார்.
இதனால் கோபமடையும் வனிதா, உங்களுக்கு வெட்டி முறிக்கிற வேலை இருக்கிறதா? என்ற கோபத்தில் கத்த, சேரனும் கொதித்து எழுகிறார். ஏற்கனவே ஷெரினுடன் வனிதாவிற்கு முட்டிக் கொண்ட நிலையில் இப்போது சேரனிடம் பிரச்சனை.