Advertisment

’இனிமே அந்த 2 பேர் கிட்ட பேசக் கூடாது’ - ரீல் மகளா? ரியல் மகளா? யார் பக்கம் நிற்பார் சேரன்?

Cheran - Losliya: அந்த 2 பேர் கிட்ட மட்டும் பேசாதீங்க. இதுக்கு மேல பேசுனீங்கன்னா, அப்றம் நான் டென்ஷன் ஆகிடுவேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Tamil 3 Promo: சற்று போரடித்த பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாகியுள்ளது. குறிப்பாக இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியாகும் 3 ப்ரோமோக்களும் எதிர்பார்ப்பை கூட்டும்.

Advertisment

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், ‘எல்லாரும் ஃப்ரீஸ்’ என டாஸ்க் கொடுக்கிறார் பிக் பாஸ். அப்போது வீட்டுக்குள் தர்ஷனின் அம்மாவும், தங்கையும் வருகிறார்கள். அம்மாவை கட்டியணைத்து கண்ணீர் வடிக்கிறார் தர்ஷன். அப்போது 'அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே மா’ என சாண்டி கூறுகிறார். பின்னர் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் புடை சூழ, கேக் வெட்டுகிறார் தர்ஷனின் தாயார்.

அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ஒலிக்க, வனிதாவின் இரு மகள்களும் வீட்டுக்குள் எண்ட்ரியாகின்றனர். வீட்டிலுள்ள அனைவரிடமும் அவர்கள் சிரித்துப் பேசி மகிழ்கிறார்கள். பின்னர் ஹவுஸ் மேட்ஸுடன் ஓடி பிடித்து விளையாடுகிறார்கள்.

மூன்றாவது ப்ரோமோவில், “நீங்க வந்து லாஸ்லியா மேல ரொம்ப கேர் எடுத்துக்குறீங்க டாடி. புள்ளன்னு சொன்னா எல்லாமே உங்க புள்ளயாகிடாது” என சேரனின் மகள் கூறுகிறார். ‘சரிம்மா நா விட்டுக் கொடுக்கல’ என சேரன் கூற, ‘விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு இல்ல, அவ விட்டுக் குடுத்துட்டேன்னு அங்க பேசிட்டு இருந்தா. அப்றம் வந்து சேரன் அப்பான்னு பேசுது. நீங்க தான் அத நம்பிட்டு இருக்கீங்க. அந்த 2 பேர் கிட்ட மட்டும் பேசாதீங்க. இதுக்கு மேல பேசுனீங்கன்னா, அப்றம் நான் டென்ஷன் ஆகிடுவேன்” என்கிறார். இதில் அப்பா மேல் இருக்கும் அதீத அன்பும், பொஸஸிவ்னெஸும் சேரன் மகளிடம் சற்று தூக்கலாகவே வெளிப்படுகிறது.

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment