Bigg Boss Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3 புரொமோக்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக திங்கட் கிழமை என்றாலே பிக்பாஸ் வீட்டில், எவிக்ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும். இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்றும், ஆனால் அது ஹவுஸ்மேட்ஸுக்கு தெரியாது என்றும் நேற்றைய நிகழ்ச்சியிலேயே கமல் கூறிவிட்டார்.
Advertisment
அதன்படி முதல் ப்ரோமோவில் நாமினேஷன் நடைபெறுகிறது. கவினை நாமினேட் செய்யும் முகென், “அண்ணன் எனக்கு நெறைய அட்வைஸ் பண்ணிருக்காரு, ஆனா இப்போ அவரே தப்பு பண்ணிட்டு இருக்காறோன்னு தோணுது” என்கிறார். பின்னர் மீண்டும் கவினை நாமினேட் பண்ணும் தர்ஷன், “அவர் அவருடைய மைக்கை கழட்டியது தனிப்பட்ட விஷயம், பட் லாஸ்லியாவையும் அப்படி செய்ய வச்சது தப்பு” என்கிறார். பின்னர் வரும் சேரன், “லாஸ்லியாவுடனான உறவை வளர்ப்பதிலேயே கவினின் கவனம் இருக்கு” என அவரும் கவினை நாமினேட் செய்கிறார்.
Advertisment
Advertisements
இரண்டாவது புரொமோவில், ”நீ நாமினேட் ஆக நான் தானே காரணம்” என லாஸ்லியா கேட்க, “காமெடி பண்ணாதப்பா... இட் ஷுட் ஹேப்பன். உன்ன காப்பாத்தணும்ன்னு நினைக்கிறவங்க, என்ன உன் கிட்ட இருந்து பிரிக்க தான் பாப்பாங்க” என கவின் கூற, “நீ உன்ன விட மத்தவங்களையும் பத்தி யோசிக்கிறேன்னு சொன்னல்ல, அத மாத்தாத” என்கிறார் லாஸ்லியா. (உண்மையில் இந்த ப்ரோமோவில் அப்படி என்ன கண்டெண்ட் இருக்கிறது என நினைத்து பிஜிஎம் எல்லாம் போட்டார்கள் எனத் தெரியவில்லை)
அடுத்து வந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில், ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே தனியாக அமர்ந்திருக்கு கவினிடம், “விட்டு கொடுத்துட்டு போணும்ன்னு சொல்றீங்க பாத்தீங்களா” என சாண்டி கேட்க, “விட்டுக் கொடுத்துட்டு போகணும்ன்னு சொல்லல, என் ஃப்ரெண்ட்ஸ விட்டுக் கொடுத்தது இல்லன்னு சொன்னேன் என்ற கவின் நான் ரெடி அதான் ஃபர்ஸ்ட் வந்துருக்கேன். ஃபஸ்ட் வந்துட்டேன் அப்படின்னாலே உங்க எல்லாத்தையும் அடிச்சிட்டு முன்னாடி போய்ட்டு இருக்கேன்னு தான அர்த்தம். செய்றன்னா இல்லையான்னு பார் உங்களையெல்லாம், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, உங்கக் கூடையே சைடுல வருவேன்னா, உங்கள காலி பண்ணிட்டு, அப்றம் அவங்களை காலி பண்றது தான் ஜி பிளேன்னு” என்கிறார்.
பேசுறது என்னமோ வீர வசனம் தான், ஆனா செயல்ல இறங்குவாரான்னு தான் தெரில!