Bigg Boss Tamil Promo: கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கிய ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்று 80-வது நாளை தொட்டிருக்கிறது. பாஸிட்டிவ் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களைப் பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் இந்நிகழ்ச்சியிலிருந்து 3 ப்ரோமோக்கள் வெளியாகும். அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில்,
Advertisment
”எல்லாரும் ஃப்ரீஸ் என பிக்பாஸ் சொல்ல, அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்பில் நுழைவாயிலை எதிர் நோக்குகிறார்கள். அப்போது விக்ரம் வேதா பட பாடலுடன் சீக்ரெட் ரூமிலிருந்த சேரன், மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு திரும்புகிறார். ஷெரின், வனிதா, லாஸ்லியா, சாண்டி, முகென், தர்ஷன் என அனைவரும் மகிழ்ந்து போகிறார்கள். தர்ஷன் சேரனை தூக்குகிறார். எல்லாத்தையும் பாத்துட்டு, ஒட்டுக்கேட்டுட்டு என வனிதா கிண்டலாகப் பேசுகிறார்.
Advertisment
Advertisements
இரண்டாவது ப்ரோமோவில், “ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் ஒலிக்கிறது. லாஸ்லியா கதறி அழுகிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் திகைத்துப் போய் நிற்கிறார்கள். சிறிது நேரம் கழித்து லாஸ்லியாவின் அப்பா வீட்டுக்குள் வருகிறார். அப்பா என லாஸ்லியா அழுதவாறு, அவர் காலில் விழுகிறார். ஆனால் அவரோ எந்த சலனமும் இல்லாமல், முகத்தை ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறார்.
மூன்றாவது ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை ஏன் கோபமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. ”என்ன சொல்லி வந்த? நான் உன்ன அப்படியா வளத்தேன்? என்ற லாஸ்லியாவின் அப்பா ஏதோ சொல்ல வந்து விட்டு, ”கதைக்கக் கூடாது” என கண்ட்ரோல் ஆகிறார். சேரனின் தோளில் கை போட்டு, உள்ள வாங்க என்கிறார். நான் அப்படி வளக்கல, என்ன சொல்லி நீ இங்க வந்த? என்ன சொல்லி நீ இங்க வந்த? என லாஸ்லியாவைப் பார்த்து கேட்கிறார். பாக்குறவங்க காறி துப்புற அளவுக்கு என்ன தலை குனிய வச்சிட்டல்ல, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு உள்ள வா” என்கிறார். டாஸ்க்கே இல்லாமல், கவின் ஃப்ரீஸாகி நிற்கிறார்.
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
இந்த ப்ரோமோவைப் பார்த்ததும், ‘அப்போ இன்னைக்கு பிக்பாஸ்ல ஏதோ சம்பவம் இருக்கு’ என உற்சாகமாகிவிட்டார்கள் ரசிகர்கள்...