scorecardresearch

‘எங்க அம்மா வித்தியாசமான லெவல்ன்னு சொன்னேன்ல’

Bigg Boss Promo: ‘டே முகெனு வேண்டாம் டா, அபிராமி திட்டும்” என ஷெரினின் அம்மா சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

Bigg Boss Tamil 3 Promo
Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. தினமும் சண்டையும் சச்சரவுமாக இருந்த பிக்பாஸ் வீடு தற்போது, குடும்பத்தினரின் வருகையால் பசுஞ்சோலையாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் பிக் பாஸ் ப்ரோமோவில், கவினுக்கு மட்டும் ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கிறார் பிக் பாஸ். அப்போது கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார். ”இவ்ளோ கேவலமா நீ ஆடுன கேமுக்கு, மட்டமா ஒரு விஷயம் பண்ணுனதுக்கு, உன்ன நம்பினவங்கள கை விட்டதுக்கு, இங்க இருக்க எல்லாரையும் ஹர்ட் பண்ணுனதுக்கு நான் இப்போ உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். டைட்டில் ஜெயிச்சுட்டு, பெரியாளாகிட்டன்ன, என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பியடிச்சுக்கோ, இல்லன்னா இந்த அடிய வச்சுக்கோ” என்றவாறு கவினின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், ‘ஆரிரோ இது ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என்ற பாடலோடு சாண்டியின் குழந்தை, பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்து வருகிறது. பின்னாடியே சாண்டியின் மனைவி வருகிறார். குழந்தையைப் பார்த்த சாண்டி, சந்தோஷத்தில் அழுகிறார். சாண்டி குழந்தையை தூக்கி வைத்திருக்க, இங்க வா என சாண்டியின் மனைவி கூப்பிடுகிறார். குழந்தை வர மறுக்கிறது.

அடுத்த ப்ரோமோவில் ஷெரினின் அம்மாவும், சகோதரியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். முதலில் ஷெரினை கட்டியணைத்து முத்தம் கொடுத்து விட்டு, பின்னர் தனித்தனியாக அனைவரையும் நலம் விசாரிக்கிறார் ஷெரினின் அம்மா. சாண்டியிடம், ’ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற’ என்கிறார். ’நா எங்க கொடுக்குறேன்’ என சிரிக்கிறார் சாண்டி. ஷெரினின் சகோதரி கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் செல்ல முற்படுகிறார் முகென். ‘டே முகெனு வேண்டாம் டா, அபிராமி திட்டும்” என ஷெரினின் அம்மா சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ‘எங்க அம்மா வித்தியாசமான லெவல்ன்னு சொன்னேன்ல’ என்கிறார் ஷெரின். அதற்கு ‘வேற லெவல் அம்மா’ என யூ – ட்யூபில் கமெண்டுகள் பறக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 3 promo today sandy kavin sherin