Bigg Boss Tamil 3 Promo: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
Advertisment
வார நாட்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை விட, வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். காரணம், வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் செய்த தவறுகளை, வார இறுதியில் பிக்பாஸ் மேடையில் தோன்றும் கமல் ஹாசன் சுட்டிக் காட்டி, கொட்டு வைப்பார்.
அந்த வகையில் இன்றைய முதல் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “ஆர்வம் கொறஞ்சிடுச்சுங்க, சலிப்பா இருக்குங்க, தியாகத்துக்கு ரெடின்னு சொன்னவங்க, ரொம்ப தீவிரமா விளையாட ஆரம்பிச்சிட்டாங்க. வெற்றி முக்கியம் தான். எப்படியாவது வெற்றிங்கறது ஒரு முறை. இப்படித்தான் அந்த வெற்றியை தொடுவேன் என்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதில் இரண்டாவது தான் சிறந்தது என்பதை எடுத்துச் சொல்லும் நேரம் இன்று” என்கிறார் கமல்.
Advertisment
Advertisements
முடிந்த நாட்களில் பிக் பாஸ் வீட்டில் நிறைய சண்டைகள் நடந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது, இன்று அவர்களுக்கு கமல் தனது ஸ்டைலில் அறிவுரை கூறுவார் என்று தெரிகிறது.