Sakshi Agarwal: நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டு, சில வாரங்கள் கழித்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினார். சமீபத்தில், சக போட்டியாளர்கள் மோகன் வைத்யா மற்றும் அபிராமி வெங்கடச்சலம் ஆகியோருடன் பிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினராக சென்றார். தற்போது அவர் பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
Advertisment
விருந்தினராக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த சாக்ஷி, பிரச்னைகளால் கடினமான நேரத்தை கடந்துக் கொண்டிருந்த ஷெரினை ஆறுதல் படுத்த ஒரு விஷயத்தைச் சொன்னார். அதாவது, ‘ரோட்ல நாய் குரைச்சா, அது உனக்கு ஒரு விஷயமா?’ என்று ஷெரினிடம் கேட்டார். இதனைப் பார்த்த பார்வையாளர்கள், சாக்ஷி தங்களைத் தான் அப்படி குறிப்பிடுகிறார் என கோபம் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து வார இறுதியில், மீண்டும் பிக் பாஸிலிருந்து வெளியேறிய சாக்ஷியிடம், சர்ச்சைக்குரிய அந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினார் கமல். இதில் தான் பொதுமக்களை அர்த்தப்படுத்தவில்லை என்றும் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் சாக்ஷி பதிலளித்தார். இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து, மன்னிப்புக் கேட்டு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.
Advertisment
Advertisements
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
அவரது பதிவில், ‘சம்பந்தப்பட்ட அனைவருக்கும்... பிக் பாஸ் வீட்டில் எனது கருத்து உங்களை காயப்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன், அதற்காக நான் முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த வகையிலும் எனது கருத்து அனைவரையும் பொதுமைப்படுத்துவதாக இல்லை. அது ஒரு பொதுவான பழமொழி. என் தோழி ஷெரினை ஆறுதல்படுத்த தவறான நேரத்தில் அதைப் பயன்படுத்திவிட்டேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல, உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு கிடைத்த அன்பு, ஆதரவு மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன், அது எனக்கு நிறைய அர்த்தம் தருகிறது. உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் என் குடும்பத்தைப் போன்றவர்கள், அதனால் நான் தவறு செய்திருந்தால் தயவு கூர்ந்து என்னை மன்னித்து எனக்கு ஆதரவளிக்கவும்” என்று தெரிவித்திருக்கிறார்.