எஸ். சுபகீர்த்தனா
Bigg Boss Tamil 3: அன்று காலை 10 மணி. சென்னையின் புறநகரில் அமைந்துள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டிக்கு ஒரு சில பத்திரிகையாளர்கள் சென்றோம். விரைவான காலை உணவுக்குப் பிறகு, பிக் பாஸ் தமிழ் 3 இறுதிப் போட்டியாளர்களான சாண்டி, லாஸ்லியா, ஷெரின் மற்றும் முகன் ஆகியோருக்கு A4 தாளில் கேள்விகளை எழுதுமாறு அனைவரிடமும் சேனல் தரப்பில் கூறுகிறார்கள்.
நாங்கள் குறைந்தது பத்து கேள்விகளைக் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவற்றில் மூன்று 'தேர்ந்தெடுக்கப்பட்டு', இறுதியில், 'அங்கீகரிக்கப்பட்டவரிடம்' கேட்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மீண்டும், நான் ஸ்மார்ட்போனிலிருந்து விலகி இருந்தேன், ஒரு நாள் அல்ல, ஒரு மணி நேரம்.
சாண்டி, இதுவரை இந்த வீட்டில் உங்கள் பயணத்தைப் பற்றி கூறுங்கள்
நான் சக போட்டியாளர்களை மகிழ்வித்து மகிழ்விக்கிறேன். ஆனால் ஒருபோதும் எனது குடும்பத்துடன் அப்படி இணைந்திருக்கவில்லை. இந்த பெரிய நேரத்திற்காக வருந்துகிறேன். படப்பிடிப்பு, நடன நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் நான் முழுமையாக கவனம் செலுத்தினேன், ஆனால் வீட்டிற்கு அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை.
பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி குடும்பம், உறவுகள் மற்றும் பிணைப்பின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. நான் இங்கிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் எங்களால் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க முடியும். நான் எப்படி இருக்கிறேனோ, அது தான் நான். எனக்கு எந்த ஸ்ட்ரடஜியும் இல்லை. ஃபன்னாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்பது தான் எனது தாரக மந்திரம். நான் என் மகளை அதிகம் நேசிப்பதால் அவளைப் பற்றி பேசும்போது மட்டும் உணர்ச்சி வசப்படுகிறேன்.
லாஸ்லியா, வெளியேறியதும் உங்கள் உடனடி திட்டம் என்ன?
நான் ஒரு நடுத்தர வர்க்க பின்னணியில் இருந்து வந்தவள். என் பெற்றோர் அனுபவித்ததைப் பற்றி மோசமாக உணர்கிறேன். வீட்டில் நடக்கும் விஷயங்களை முன்வைத்து, அவர்களிடம் விசாரிக்கப்படும் என நான் நம்புகிறேன். முதலில் நான் அவர்களுடன் பேச வேண்டும், நடந்த விஷயங்களை எடுத்துக்கூறி, பிரச்னைகளை தீர்க்க வேண்டும். வேறு எவரையும் விட அவர்கள் தான் என்னை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் என்னை நம்புகிறார்கள், அதுவும் முக்கியமானது.
பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் பார்ப்பது ஒரு மணி நேர காட்சிகள் மட்டுமே. அதனால் உண்மையை எடுத்துச் சொல்லும் இடத்தில் நான் இருப்பதாக நினைக்கிறேன். இந்த வீட்டில் நான் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நான் இப்படித்தான் இருக்கிறேன். எனது குடும்பத்தில் எல்லாவற்றிலும் முடிவெடுப்பவள் நான் தான். இங்கு நடந்த விஷயங்களைப் பொருட்படுத்தாமல் அது தொடரும். (சிரிக்கிறார்)
ஷெரின், இந்த 100 நாட்களில் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களைப் பற்றி கூறுங்கள்
வனிதாவும் நானும் நல்ல தோழிகள் என்றாலும், தர்ஷனை முன் வைத்து எங்களுக்கு ஒரு பெரிய சண்டை வந்தது. அவருடைய பேச்சால் நான் காயமடைந்தேன். அவர் சொல்வது உண்மையல்ல என்று எனக்குத் தெரியும், இருந்தாலும் கண்ணீருடன் இருந்தேன். தர்ஷன் எனது நெருங்கிய நண்பர். போட்டி இருந்தபோதிலும், பல நேரங்களில் தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். அத்தனை திறமைகளை அவர் கொண்டுள்ளார்.
தர்ஷன் எங்களுடன் இல்லை என்பதிலிருந்து என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. இது என்னை இந்தளவு பாதிக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் கற்றுக் கொள்கிறேன். பிக் பாஸ் தமிழ், ஒரு சிறந்த ஹ்யூமன் பீயிங்காக வளர எனக்கு உதவியது. உதாரணமாக, ஆரம்பத்தில், லாஸ்லியாவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் இப்போது, நாங்கள் நல்ல தோழிகள்.
முகென், உங்களுடைய பிளான் என்ன?
சிறுவயதிலிருந்தே ’கலை’ தான் எனது வாழ்க்கை என்பதை நான் உணர்ந்தேன். மேடை பாடகரான என் தந்தையை மக்கள் உற்சாகப்படுத்துவதைப் பார்த்து வளர்ந்தவன் நான். அதிக இசை ஆல்பங்களை வெளியிடவும், 'பிளாக்பஸ்டர்' திரைப்படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். அனைவரையும் உற்சாகப்படுத்துவது தான் என் எண்ணம். எனது குடும்பத்தை மிஸ் பண்ணினாலும், பிக் பாஸ் தமிழ் 3 குடும்பத்தின் ஓர் அங்கமாக இடம் பெற்றுள்ளேன். நாங்கள் தர்ஷன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் போய் விட்டார்.