Advertisment

Bigg Boss 3: பிக்பாஸ் 3 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றமா?

போட்டியாளர்களின் அறிமுகம் இருப்பதால், நிறைய நேரம் தேவைப்படுமென முன் கூட்டியே ஒளிபரப்பு செய்யப்படுகிறதாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Big boss 3 tamil பிக் பாஸ் போட்டியாளர்கள்

Big boss 3 tamil : பிக் பாஸ் 2 தமிழ் போட்டியாளர்கள் யார்?

Bigg Boss Tamil 3: இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இதில், போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் நிகழ்ச்சி துவங்கும் 23-ம் தேதி தான் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Advertisment

இந்நிலையில் பிக்பாஸ் விளம்பரத்தில் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பல முன்னணி தொலைக்காட்சிகளில், முக்கிய சீரியல்கள் 8 மணிக்கு ஒளிபரப்பாவதால், ரிமோட் கையில் கிடைக்குமா என்ற சோகத்தில் ஆழ்ந்திருந்தனர், பிக்பாஸ் ரசிகர்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் மட்டும் தான் 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது என தெளிவுப் படுத்தியுள்ளது சேனல் நிர்வாகம். முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுகம் இருப்பதால், நிறைய நேரம் தேவைப்படுமென முன் கூட்டியே ஒளிபரப்பு செய்யப்படுகிறதாம்.

மற்ற நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகிறது.

 

Kamal Haasan Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment