/tamil-ie/media/media_files/uploads/2019/07/Bigg-Boss-Tamil-3-Vanitha-Vijayakumar-and-Meera-Mithun-1.jpg)
Vanitha Vijayakumar and Meera Mithun
Bigg Boss Vanitha Vijayakumar: பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வனிதா விஜயக்குமார். சில படங்களில் நடித்திருந்தாலும், தனிப்பட்ட குடும்ப பிரச்னைகளால் தான் மக்களுக்கு பரிச்சயமாகியிருக்கிறார்.
நடிகர் ஆகாஷுடன் ஏற்பட்ட மண முறிவைத் தொடர்ந்து, இரண்டாவதாக தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை கரம் பிடித்தார் வனிதா. 2007-ல் இவர்களது திருமணம் நடந்தது, இருப்பினும் கருத்து வேறுபாட்டால் இருவரும் 2010-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். இவர்களது மகள் ஜோவிகா, தந்தை ஆனந்துடன் தெலுங்கானாவில் வசித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மகள் ஜோவிகாவை, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் வனிதா. ஆனால் தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலுங்கானா போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ராஜன் ஆனந்த். இதை ஏற்றுக் கொண்ட போலீஸார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார் வனிதா. அந்நிகழ்ச்சிக்காக செட் அமைக்கப்பட்டிருக்கும் எல்லைக்குட்பட்ட நசரத்பேட்டை போலீஸாரிடம் உதவி கோரியுள்ளதாம் தெலுங்கானா போலீஸ்.
இந்நிலையில் தற்போது தமிழக போலீசாரின் உதவியோடு, பூந்தமல்லியில் உள்ள பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறதாம் தெலுங்கானா போலீஸ். இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், நடிகை வனிதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனிதா கைது செய்யப்படுவாரா, அல்லது விஜய் டிவி நிர்வாகம் இதில் தலையிடுமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையே மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மீரா மிதுனும் விரைவில் கைதாகலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.