பிக்பாஸ் விளையாட்டின் வில்லியை ஒருவழியாகக் கண்டுப்பிடித்து விட்டார்கள் ரசிகர்கள். முரட்டுத்தனம் மற்றும் ஆணவம் மிகுந்தவராக வனிதாவின் பிம்பம் ரசிகர்களிடம் பரிச்சயமாகியுள்ளது.
சத்தமான குரலில் ஹவுஸ்மேட்ஸ் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அவர் மீது ரசிகர்களின் எதிர்மறையான பார்வை விழுந்துள்ளது. எலிமினேஷனுக்கு நாமினேட் அவர், வார இறுதியில் அவர் வெளியேற்றப்படுவதைக் காண பார்வையாளர்கள் தீவிரமாக காத்திருக்கிறார்கள்.
சோஷியல் மீடியாவில் #Vanitha #VanithaVijayakumar என்ற ஹேஷ்டேக்குகளின் நூற்றுக்கணக்கான மெஸ்ஸேஜ்களின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் வனிதா. இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்த, காயத்ரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் மூத்த நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதாவை விட ‘பெட்டர்’ எனும் அளவுக்கு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் வனிதா.
நாடக தன்மை இல்லாத எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிடுவதோடு, சலிப்பூட்டும் நிகழ்ச்சியாகவே மாறும். நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, பிக்பாஸ் தமிழின் முதல் சீசனில் காயத்ரி வெளியேற்றப்பட்டவுடன் கணிசமான பார்வையாளர்களை அந்நிகழ்ச்சி இழந்தது. காரணம், அதன்பிறகு எந்த நாடகமும் அங்கு அரங்கேற்றப்படவில்லை.
அதேபோல், ரசிகர்களின் விருப்பப்படி வனிதா வெளியேற்றப்பட்டால், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மந்தமாகவும் சலிப்பாகவும் மாறும். ஏனெனில் மீதமிருக்கும் ஹவுஸ்பேட்ஸ் சேஃபாக விளையாடுவார்கள். அதோடு வனிதாவை வெளியேற்றிவிட்டால், அது சேனலின் டி.ஆர்.பி-யையும் பாதிக்கும்.
இருப்பினும், வெளியேற்றம் வனிதாவுக்கு நல்லது. எப்படி தெரியுமா?
தற்போதைய தலைமுறையினர் எந்தவொரு விஷயத்தையும் இயத்திற்கு நெருக்கமாக எடுத்துக் கொண்டு, தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது யோசிக்காமல் எதிர்வினையாற்றுகிறார்கள். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் காயத்ரி அல்லது ஜூலி-யாக இருக்கட்டும், இரண்டாவது சீசனில் மஹத் அல்லது ஐஸ்வர்யா-வாக இருக்கட்டும், அவர்களின் செய்கைகளுக்காக சமூக வலைதளங்களில் அதிகளவு ட்ரோல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றும், அவர்களின் ஒவ்வொரு போஸ்ட்டும் ஆன்லைனின் நிறைய விமர்சனங்களை சந்திக்கிறது.
வனிதா நிகழ்ச்சியில் நடந்துக் கொள்வதைப் பார்க்கும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது நிலைமையைக் கையாள்வதில் வனிதாவுக்கு சிரமங்கள் இருக்கும். அவள் வலுவாக இருக்கலாம், ஆனால் தொடர்ச்சியான விமர்சனங்கள் அவரது சுயமரியாதையை என்றென்றும் கெடுக்கும். மேலும், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். வனிதாவுக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருக்கிறார்கள், இது அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, பிக் பாஸ் தமிழில் இருந்து வனிதா வெளியேற்றப்படுவது அவருக்கு நலம் பயக்கும். நீண்ட காலம் தங்கியிருப்பது, பெரிய தொல்லைகளுக்கு வழி வகுக்கும்!