Bigg Boss Tamil 3 Episode 58: லாஸ்லியா சேரனை நாமினேட் செய்தததை உள்நோக்கமாக வைத்தா, அல்லது சேரனை உற்சாகப்படுத்துவதற்காகவா என்று தெரியவில்லை, நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் காலை அலாரமாக, ’பாண்டவர் பூமி’ படத்தில் இடம் பெற்றிருக்கும் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்..” என்ற பாடல் ஒலிபரப்பானது.
கஸ்தூரியின் கண்ணீர் கதை: சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!
தனது படத்திலிருந்து பாடல் ஒலிபரப்பியதற்காக பிக்பாஸுக்கு நன்றி தெரிவித்தார் கமல். ஆனால் பிக்பாஸ் எந்த உள்நோக்கத்தில் அந்தப் பாடலை ஒலிபரப்பினார் என்பதன் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை என்பதே நிதர்சனம். இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் “அம்மா நான் போயிட்டு வரேன்” என்ற பெயரில் பள்ளியை மையமாக வைத்து நடந்தது. இதற்கு கஸ்தூரி பள்ளி ஆசிரியராகவும், சேரன் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.
வைல்டு கார்டில் போட்டியாளரான வனிதா: சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா
இந்த டாஸ்க்கில் வனிதா உட்பட அனைத்து போட்டியாளர்களும் பள்ளிக் குழந்தைகளாக மாறி, பள்ளியில் குழந்தைகளுக்கிடையே நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவுப்படுத்தினர். சாண்டி மட்டும் அவ்வப்போது மொக்கை ஜோக்கடித்து எரிச்சலூட்டினர். ஆனால் அவரை ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கண்டுக்கொள்ளவில்லை.
”என்னடா இன்னைக்கு சம்பவம் எதுவும் நடக்கலயே” என நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் வனிதா. அதவாது, பிக் பாஸ் மாணவர்கள் அனைவருக்கும் வாத்து பாடல் ஒன்றை சொல்லிக் கொடுக்கும் போது, தன்னை ’வாத்து’ என்று குறிப்பிட்டு கஸ்தூரி பேசியதாக பிரச்னையை கிளப்பினார் வனிதா.பிறகு, இருவருக்கும் எழுந்த பிரச்னையை அடுத்து, மன்னிப்பு கோரினார் கஸ்தூரி. எனினும் டாஸ்க் முடிந்து இந்த பிரச்னையை மீண்டும் தலைதூக்கி, பின்னர் சமாதானமடைந்தது.
பின்னர் ஷெரீனிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார் சேரன். அப்போது, டாஸ்கில் ஈடுபட்டிருக்கும் போது கஸ்தூரி மறைமுகமாக வனிதாவை தாக்கிய பேசியதால் அவர் பெஸ்ட் பெர்ஃபாமருக்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என்றும், மாணவியாக இருக்கும் ஒருவர் ஆசிரியரை எதிர்த்து பேசியதால் வனிதாவும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கான வாய்ப்பை இழந்துவிட்டார் என்றார்.
பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் பிக் பாஸ். இதில் முகென், தர்ஷன், கவின், சாண்டி ஆகியோர் பகிர்ந்துக்கொண்ட பள்ளிக் கால கதைகள் நகைப்பூட்டின.