Bigg Boss Tamil 3 Episode 60: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 60-ம் நாளில் கவின் மீது தனக்கு இருக்கும் பிரியம் மற்றும் அன்பு குறித்து சேரனிடம் மனம் திறந்து கூறினார் லாஸ்லியா.
ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக் கொண்டிருந்த கஸ்தூரி, மொக்கை கதை சொல்வதாகக் கூறி ஷெரீனை அழவைத்துவிட்டார். ஆனால் அது பெரிய பிரச்னையாக மாறவில்லை. அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கஸ்தூரி தும்மியதற்கு, அவர் சுத்தமாக இல்லை என்று சண்டை போட்டார் வனிதா. இன்னும் ஒரு படி மேலே போய், கஸ்தூரி கிச்சனில் இருந்தால் நான் சமைக்க மாட்டேன் என பிரச்னையைக் கிளப்பினார். பின்னர் ஒருவழியாக சமாதானம் செய்து சமைக்க வைத்தார் வீட்டின் தலைவர் ஷெரீன்.
பின்னர் கவினிடமும் லாஸ்லியாவிடமும் தனித்தனியாகப் பேசினார் சேரன். இந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போது, அதில் நிதானமாக இருக்க வேண்டும் என இருவருக்கும் அறிவுரை வழங்கினார். இதை லாஸ்லியாவிடம் கூறும் போது, ஒரு தந்தையின் மனநிலையும், அக்கரையும் சேரனிடம் நன்கு வெளிப்பட்டது.
அதைத் தொடர்ந்து லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை வந்தது. இதில், பலரும் சேரன் பெயரை குறிப்பிட்டனர். அப்போது, தன்னுடைய பெயரையும் கூற வேண்டும் என அனைத்து ஹவுஸ்மேட்ஸையும் கட்டாயப்படுத்தினார் வனிதா.
ஆனால் இறுதியில் சேரன், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக போட்டியாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது, இந்த வாரம் சரியாக விளையாடாதவர்களை தேர்வு செய்யும் நடைமுறை இல்லை என்று பிக்பாஸ் அறிவித்தார்.
பின்னர் சாண்டி, கவின், கஸ்தூரி, தர்ஷன், லாஸ்லியா, முகின் ஆகிய 6 பேரும் ’ஒளிகண்டு’ விளையாடி, சிரிப்பலைகளை ஏற்படுத்தினர். பிறகு கார்டன் பகுதியில் ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒரு போட்டியாளரை குறித்து மற்றவர்கள் சுற்றி அமர்ந்து பேச வேண்டும்.
இதில் அனைவரும் ஒவ்வொருவரையும் பற்றி பேசினர். கவின் முறை வந்த போது, அவரை குறித்து மற்ற போட்டியாளர்கள் சிரிப்பு வரும் விதமாக பேசினர். லாஸ்லியா மட்டும் தான் கவின் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசினார். இதில் முகென், சாண்டி, கஸ்தூரி, ஷெரீன் ஆகியோர் குறித்து மற்றவர்கள் பேசியது நெகிழ்ச்சியை வரவழைத்தது.
ஆனால் நிகழ்ச்சியில் பெரும்பாலும், கவின் பெருமையையே லாஸ்லியா பேசிக் கொண்டிருந்ததால், பார்ப்பவர்களுக்கு ஒரு வித சலிப்பு ஏற்பட்டது.