Bigg Boss Tamil 3 day 75, 06.09.19, sherin, tharshan
Bigg Boss Tamil 3 Episode 75: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 75-ம் நாளில் நடந்த முந்தைய நாள் நடந்த ஷெரின் - வனிதா சண்டையைப் பற்றி கவினும் தர்ஷனும் பேசினர். அப்போது, ”அன்பு, மன்னிப்பு, நன்றி, நண்பர்கள், காதல், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவை இருக்கக் கூடாது” என்று கவின் கூற, ”மொத்தத்தில் மனிதாகவே இருக்கக் கூடாது” என்றார் சாண்டி.
Advertisment
”மத்தவங்க பேசுனதுக்கு ஏன் இப்படி அழுதுட்டே இருக்க. இது ஒண்ணும் அப்படியொரு விஷயம் இல்லை. உனக்கும், எனக்கும் இதைப் பத்தி நல்லா தெரியும்” என்று ஷெரினிடம் கூறினார் தர்ஷன். பின்னர் இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கின் மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ”முந்திக்கோ பின்னிக்கோ” டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த வனிதா, தர்ஷன், சேரன், ஷெரின் அணி அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் வனிதா, சேரன், மோகன் வைத்யா ஆகியோர் லாஸ்லியாவைப் பற்றியும், சேரன், தர்ஷன் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் பேசிக்கொண்டனர். இதையடுத்து, சாண்டி, அபிராமி ஆகியோர் யோகா செய்தனர். பின்னர் ”முந்திக்கோ பின்னிக்கோ” டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணி, சிறப்பாக செய்தது யார் என்றும் தெரிவிக்க வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில், சேரன், தர்ஷன் ஆகியோர் சிறப்பாக செய்ததாக தெரிவித்தனர். இதே போன்று இந்த வாரம் முழுவதும் சிறப்பாக டாஸ்க் செய்தவர்களில் லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டார். சரியாக டாஸ்க் செய்யாதவர்களில் கவின் தேர்வு செய்யப்பட்டார். அதோடு நேரடியான நாமினேஷனுக்கும் தேர்வானார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது வழங்கினர். இந்த வீட்டில் பச்சோந்தி போன்று போலியானவர் விருது லாஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை சாக்ஷியிடமிருந்து வாங்கி தூக்கி எறிந்தார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியாவை கண்டித்தார் மோகன் வைத்யா. இதையடுத்து, எனக்கு விருது கொடுக்க விருப்பமில்லை என்று சாக்ஷி தெரிவிக்க, லாஸ்லியா, சாக்ஷி இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. தனது மகளை பச்சோந்தி என்று அழைத்த விருந்தினர்களை சேரன் கடுமையாக கண்டித்தார். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, நரி - சாண்டி, மின்மினிப்பூச்சி - ஷெரின், கிளி - முகென், கொசு - வனிதா, கழுகு - தர்ஷன், தவளை - கவின், சேரன் - யானை, கழுதைப்புலி - வனிதா, லாஸ்லியா - நாய், பச்சோந்தி, பசு - வனிதா, ஆகியவற்றோடு, அடுத்தவரை சார்ந்து வாழும் அட்டை விருது அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.