வனிதா: மத்தவங்களுக்கு தான் வில்லி, ஆனா பிள்ளைங்களுக்கு எப்போவும் ஹீரோயின் தான்!

Bigg Boss Tamil 3, Episode 81 Written Update: லாஸ்லியாவை மகளாக கொண்டாடும் உனது அப்பா உன்னை மறந்துவிட்டாரா என்று எனது தோழிகள் கிண்டல் செய்வதாக சேரனின் மகள் வருத்தப்பட்டுக் கொண்டார்.

Bigg Boss Tamil 3 day 81, 12.09.19,
Bigg Boss Tamil 3 day 81, 12.09.19,

Bigg Boss Tamil 3 Episode 81: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது காதல் பிரச்னைகள் மறக்கடிக்கப்பட்டு, வருகை தரும் குடும்பத்தினரின் அன்பு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 81-ம் நாள் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் குடும்பத்தினர் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டை விட்டு சென்றனர். அவர்கள் சென்றதும், லாஸ்லியாவும், கவினும் ஒருவருக்கொருவர் எல்லாவற்றிற்கும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். இனிமேல், தனது அப்பாவுக்காக போட்டியில் மட்டும் அதிக கவனம் செலுத்தப் போவதாக லாஸ்லியா தெரிவித்தார். கவினையும் தன்னைப் போன்று விளையாட்டில் ஆர்வம் காட்டவும் வலியுறுத்தினார். இதனால் இருவரும் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரீதியில் பேசிக் கொண்டனர்.

பின்னர் தர்ஷனின் அம்மாவும், சகோதரியும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதார் தர்ஷன். பிறகு தர்ஷனின் அம்மா ஷியமளாவிற்கு அங்கு வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்றுவிட்டனர். பின்னர், பிக் பாஸ் வீட்டில்  ’வாயாடி பெத்த புள்ள’ பாடல் ஒலித்தது. அப்போது வனிதாவின் இரு மகள்களும் ஸ்டைலாக பிக் பாஸ் வீட்டில் எண்ட்ரியானார்கள். மகள்களைப் பார்த்ததும் வனிதாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். அவர்களுடன் வனிதா, தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ’ரௌடி பேபி’ பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடினார். அவர்களுடன் மற்ற போட்டியாளர்களும் நடனம் ஆடினர்.

உள்ளே வந்த லாஸ்லியா குடும்பம்: தவித்த கவின், அழுத லாஸ்லியா…

வனிதாவின் குழந்தைகள் சென்றதும் சிறிது நேரம் கழித்து, ’ஆட்டோகிராஃப்’ பட பாடலுடன் சேரனின் அம்மா, மனைவி, மகள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். போலியாக நடிக்கும் லாஸ்லியாவுடன் இனி பேசக்கூடாது என்று சேரனின் மகள் கட்டளையிட்டார். லாஸ்லியாவை மகளாக கொண்டாடும் உனது அப்பா உன்னை மறந்துவிட்டாரா என்று எனது தோழிகள் கிண்டல் செய்வதாக சேரனின் மகள் வருத்தப்பட்டுக் கொண்டார். அதில் அனைத்து மகள்களையும் போல அப்பா மீது சேரன் மகளுக்கும் இருக்கும் பொஸஸிவ்னெஸ் வெளிப்பட்டது.

”எல்லாரும் கடைசி வரை இருந்து வெற்றியோடு வாருங்கள். எனது மகன் எது சொன்னாலும், அது நல்லதுக்காகவே இருக்கும். யாரும் வருத்தப்பட வேண்டாம்” என்றார் சேரனின் அம்மா.

3 மாத மகளின் பிரிவை, கண்ணீரால் வெளிப்படுத்திய சாண்டி!

பிக் பாஸ் வீட்டிலுள்ள அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பமும் இந்த வாரம் வீட்டிற்கு விசிட் அடித்திருக்கிறது. கவின், சாண்டி, ஷெரின் ஆகியோரின் குடும்பம் அடுத்தடுத்த தினங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கவினின் குடும்பத்தில் ஏற்கனவே பிரச்னைகள் இருக்கும் நிலையில், அவரைப் பார்க்க பிக் பாஸ் வீட்டிற்கு யார் செல்வார்கள்? அப்படி சென்றால் வெளியில் நடந்த பிரச்னைகள் பற்றி தகவல் தெரிய வருமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது…

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 written update episode 81 vijay tv vanitha vijayakumar tharshan cheran

Next Story
கதிர் – முல்லை காதல்.. அடிக்கடி மூக்கை விடும் தனம் அண்ணி!pandian stores today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com