Bigg Boss Tamil 3 Episode 91: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக 90 நாட்களைக் கடந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க தான் நிகழ்ச்சி சற்று சூடு பிடிக்கிறது.
Advertisment
91-ம் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும், ஆகையால் தன்னை வெளியேற்றும்படியும் அழுதுக் கொண்டே பிக் பாஸிடம் முறையிடுகிறார் லாஸ்லியா. இதற்குக் காரணம், முந்தைய நாள் நிகழ்ச்சியில் கமல் குறும்படம் போட்டு காண்பித்ததும், வீட்டில் என்ன நடந்தாலும் தங்களை (கவினையும் சேர்த்து) மட்டுமே அனைவரும் குறி வைப்பதாகவும் இன் டைரக்டாக தெரிவித்தார். எல்லாத்தையும் கேட்டுவிட்டு, ”நீங்க விளையாடி ஜெயிக்க பாருங்க, பாட்டு பாடி சந்தோஷமா இருங்க”, என லாஸ்லியாவை அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.
பின்னர் அகம் டிவி வழியே ஹவுஸ்மேட்ஸை சந்தித்தார் கமல். அவர் சொன்ன நகைச்சுவைக்கு அனைவரும் சிரித்த போதிலும், கவினும் லாஸ்லியாவும் சிரிக்காமல், இறுக்கமான முகத்துடன் இருந்தனர். ”நாங்க எவ்ளோ தான் திருந்திட்டாலும், இன்னும் திருந்த முயற்சி பண்ணினாலும், எல்லாரும் முன்னாடி நடந்த விஷயங்களை வச்சே எங்கள குத்திக் காட்டுறாங்க” என்றார் லாஸ்லியா.
Advertisment
Advertisements
அடுத்ததாக எவிக்ஷனுக்கு வந்த கமல், யார் உள்ளே இருக்கணும் என நினைக்கிறீர்கள் என்றதற்கு ஹவுஸ்மேட்ஸ் சேரனின் பெயரை சொன்னதும், பார்வையாளரகளிடமிருந்து ஆரவாரம் ஏற்பட்டது. இருப்பினும் விஜய் டிவி அவரைத் தான் இந்த வாரம் வெளியேற்றும் என்பதும் நாம் அறிந்தது தான். ஷெரின் காப்பாற்றப்பட்டதாக அறிவித்த கமல், லாஸ்லியாவிடம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்றார். அவர் இரண்டு பேரையும் என்றார். பின்னர் கவின் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, லாஸ்லியா மற்றும் சேரனை பொருட்களோடு அறைக்குள் வர சொன்னார் பிக் பாஸ். உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் ‘டபுள் எவிக்ஷனா இருக்குமோ’ என்றபடி பேசிக் கொண்டனர். அப்போது கவினின் முகம் மாறியது. பின்னர் சேரன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த சேரன் 2-வது முறையாக கமல் ஹாசன் மற்றும் பார்வையாளர்களை சந்தித்தார். தனது அப்பா வந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றி, “இந்த வீட்டில், எனக்கு கிடைத்த அனுபவங்கள் அதிகம். நான் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், நல்ல அனுபவங்களையும், 16 உறவுகளையும் சம்பாதித்திருக்கிறேன்” என்றார்.
”ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான குணங்களை பெற்றுள்ளனர். இதில், ஷெரின், மற்ற அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். கவின் உள்ளதை உள்ளவாறு பேசக்கூடியவர். சாண்டிக்கு பிளான் போடவே தெரியாது. அவருக்கு உதவியாக இருப்பது என்னவோ கவின்தான்” என்றார்.
”முகெனுக்கு கோல்டன் டிக்கெட் மட்டும் தான் இப்போது கிடைச்சிருக்கு. இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை. தர்ஷன் கொலவெறியில் இருக்கிறார். ஆதலால், அனைவருமே கவனமாக விளையாடுங்கள்” என்று கூறி விடைபெற்றார். அதோடு ஹவுஸ் மேட்ஸிடமும் பேசினார். குறிப்பாக கவினை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய சேரன், மீதமிருக்கும் நாட்களில் சரியாக விளையாண்டால் கூட ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய கமல் ஹாசன் கூறுகையில், முகெனைத் தவிர, மற்ற போட்டியாளர்களை எலிமினேட் செய்யலாம். ஆகையால், அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். அதோடு டபுள் எலிமினேஷனைப் பற்றியும் குறிப்பிட்டார், ஆகையால் அடுத்த வாரம் அது நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.