நட்பில் ஏற்பட்ட விரிசல்: பிக் பாஸிடம் கதறி அழுத சாண்டி...

Bigg Boss Tamil 3, Episode 89 Written Update: கேம்ன்னா நாம தனியா தான் விளையாடனும். ஷெரினுக்கு ஒரு நியாயம், லாஸ்லியாவுக்கு ஒரு நியாயமா?

Bigg Boss Tamil 3, Episode 89 Written Update: கேம்ன்னா நாம தனியா தான் விளையாடனும். ஷெரினுக்கு ஒரு நியாயம், லாஸ்லியாவுக்கு ஒரு நியாயமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 day 89, 20.09.19,

Bigg Boss Tamil 3 day 89, 20.09.19,

Bigg Boss Tamil 3 Episode 89: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பும், கொஞ்சம் மந்த நிலையும் என மாறி மாறி நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சேரன், கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின், முகென் ஆகிய 7 போட்டியாளர்கள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர்.

Advertisment

”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா?” – கோபமான ஷெரின்

பிக்பாஸின் 89-ம் நாள் நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமாக இருந்தது. ஆரம்பித்ததே முட்டை டாஸ்க் பிரச்னையில் தான். ஒரு பக்கம் கவினும் லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருக்க, மறுபுறம் சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் லாஸ்லியாவின் முட்டையை உடைக்க பிளான் போடுகிறார்கள்.  மூன்று பேரும் முட்டையை மறைத்து மறைத்து நின்று, யாரும் எதிர் பார்க்காத வேளையில் முட்டையைப் போட்டு உடைத்து விடுகிறார்கள். முதலில் ஷாக்கான லாஸ்லியா பின்னர், சிரித்து சமாளிக்கிறார்.

தொடர்ந்து கவினிடம் பேச்சுக் கொடுக்கிறார் சாண்டி. அந்த நேரம் பார்த்து, கவினின் முட்டையை உடைக்கிறார் முகென். இதைப் பார்த்த கவின், “எனக்கு சாண்டி அண்ணே வந்து பேச்சு கொடுக்கும் போதே தெரியும், ஏதோ நடக்கப் போகுதுன்னு” என்கிறார். இதைக் கேட்ட சாண்டிக்கு மனம் வாடுகிறது. சாண்டி டார்க்கெட் பண்ணியது லாஸ்லியாவின் முட்டையை தான். முன்பு போல் தன்னிடம் கவின் பேசுவதில்லை என்பது சாண்டியின் வருத்தம். ’நீ தான் என்ன விட்டு விலகி போற’ என்பது கவினின் வாதம்.

Advertisment
Advertisements

போதாக்குறைக்கு, யாருக்கு எந்த இடம் என்ற, டாஸ்க்கில் சாண்டி கவினுக்குக் கொடுத்த 7-வது இடத்தைப் பற்றி கோபமாக கவினிடம் கூறுகிறார் லாஸ்லியா. கொஞ்சம் எக்ஸ்ட்ரீமாக சென்ற லாஸ்லியா ’உன் ஃபிரெண்டுன்னு சொல்லிட்டு எப்படி அவனுக்கு 7-வது இடம் குடுக்க மனசு வந்துச்சு. இவனுக்கு 6 குடுத்துட்டு, எனக்கு 7 குடுத்திருந்தா கூட சந்தோஷப் பட்டிருப்பேன்’ என சாண்டியிடம் கேட்கிறார் லாஸ்லியா. அவர் இப்படி கேட்டதும் வருத்தப்படுகிறார் சாண்டி. கூடவே பக்கத்தில் நிற்கும் தன் நண்பன் கவின், தனக்காக எதுவும் பேசவில்லையே என்ற ஆதங்கமும். இது கவின் - சாண்டிக்குள் பிரச்னையாக மாறுகிறது.

குடும்பத்தினர் வந்து போனதும் இரு வேறு துருவங்களாக இருந்த கவின் லாஸ்லியா மீண்டும் பழையபடி இணைந்துக் கொண்டனர். கூடையில் பந்து எடுக்கும் டாஸ்க் நடக்கும் போது, லாஸ்லியாவால் சாண்டிக்கும் கவினுக்கும் சண்டை ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் இன்னும் சரியாக பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையே சாண்டியை அழைத்த பிக் பாஸ் கவினிடம் பேசுங்கள் என்றார். அதற்கு கதறி அழுத சாண்டி, எப்போதும் எதையோ இழந்ததைப் போன்றே கவின் இருப்பதாகவும், தன்னால் அவனை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். அதோடு தன்னை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு, ’மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை விளையாடுகிறார்கள். நீங்களும், உங்களது போட்டியை விளையாடுங்கள்’ என்றார் பிக் பாஸ்.

”கவினிடம் பேசுங்கள். இப்போது இல்லை என்றால், சிறிது நேரத்திற்கு பிறகு பேசுங்கள். அவர் உங்களது நண்பர்” என்று சாண்டிக்கு அறிவுரை வழங்கினார் பிக் பாஸ். அப்போது இவர்கள் வெளியில் இருந்து வரும் போதே, நாம் இருவரும் நாமினேட் பண்ணிக் கொள்ளக் கூடாது என பிளான் செய்ததை சாண்டி கூறுகிறார்.

இதற்கிடையே ’நீங்க கூட தான் ஷெரினை டார்க்கெட் பண்றீங்க. ஆனா அதுக்காக நான் உங்கக் கிட்ட வந்து சண்டை போடுறேன்னா?’. கேம்ன்னா நாம தனியா தான் விளையாடனும். ஷெரினுக்கு ஒரு நியாயம், லாஸ்லியாவுக்கு ஒரு நியாயமா என்கிறார்.

அடுத்து டிக்கெட் ஃபினாலேவுக்கான கடைசி டாஸ்க்காக சைக்கிளை மிதிக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. நிற்காமல் சைக்கிளை மிதிக்க வேண்டும். ஓவ்வொரு மணி நேரத்துக்கும் அதற்கான பாயிண்ட்ஸ் வழங்கப்படும், ஆனால் அந்த பாயிண்ட் உங்களை சேராது. சீட்டுக்கடியில் யார் ஃபோட்டோ இருக்கிறதோ, அவரை தான் இந்த பாயிண்டுகள் சேரும். இதில் கால் முடியாது என்பதால், முதலில் கவின் விட்டு விடுகிறார். முதுகு வலி என்பதால், சேரனும் விட்டு விடுகிறார். பின்னர் 5 மணி நேரம் மிதித்த ஷெரின், தன்னால் முடியவில்லை என விட்டு விடுகிறார். மீதமுள்ளவர்கள் டாஸ்க்கில் இருக்கிறார்கள்.

எப்போதுமே எதிர்பார்க்காதவர்கள் டிக்கெட் ஃபினாலேவை வின் பண்ணுவார்கள். ஆனால் ஃபைனலில் வேறு நபர் வருவார்கள். இந்த முறை எப்படி இருக்கும் என்பதை, விரைவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: