Bigg Boss Tamil 3 Episode 88: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88-வது நாள் எபிசோட் கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருந்தது. முந்தைய நாள் செய்துக் கொண்டிருந்த முட்டை டாஸ்க் 88-ம் நாளிலும் தொடர்ந்தது.
Advertisment
ஷெரின் தூங்கியதும், முட்டையை ஒளித்து வைத்து விடலாம் என சாண்டி ஐடியா கொடுக்க, சேரனும் அப்படியே செய்கிறார். பின்னர் தூங்கி எழுந்த ஷெரினிடம், முட்டையை உடைத்து விட்டோம் என்கிறார்கள். ஷெரினும் அதை நம்பி, சரி என்று போட்டியை விட்டுக் கொடுக்கிறார். பின்னர் சாண்டியின் முட்டையை கவின் உடைத்துவிட்டு, சேரன் மறைத்து வைத்த ஷெரினின் முட்டையையும் கவின் உடைக்கிறார். போட்டியே யார் முட்டைகளை உடைக்கிறார் என்பது தான். அதனால் இதில் ட்விஸ்ட் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பின்னர் போட்டியாளர்களை அழைத்து, டிக்கெட் ஃபினாலே வரைக்கும் வந்த அனுபவங்களைப் பற்றி சொல்ல சொல்கிறார் பிக் பாஸ். தாங்கள் உள்ளே நுழைந்தது முதல், கடந்து வந்த பாதைகளையும், மிஸ் பண்ணிய விஷயங்களையும் போட்டியாளர்கள் விவரிக்கிறார்கள். அதற்கடுத்த பால் டாஸ்க்கில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முரட்டுத்தனமாக விளையாடினார்கள். இந்த டாஸ்க்கில் லாஸ்லியாவை காரணமாக வைத்து சாண்டியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் கவின். சாண்டியும் நிலைமையைப் புரிந்துக் கொண்டு, சாரி சொல்லு விட்டு கடந்து விட்டார்.
ஒவ்வொருத்தரும் மற்றவர்களது பாலை எடுக்கும் போது, கவின் லாஸ்லியாவின் பாலையோ, லாஸ்லியா கவினின் பாலையோ எடுக்காமல், இருவரும் சேர்ந்து மற்றவர்களை மட்டுமே குறி வைப்பதை சுட்டிக் காட்டி கோபமானார் ஷெரின். நீங்க என்ன டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா என கோபமாக கவினிடம் கேட்டார். பின்னர் தர்ஷனிடம் இதை விளக்கும் போது, அவரும் இதனை ஒத்துக் கொண்டார். ஆனால் ஷெரினும் தர்ஷனும் போட்டி என்று வந்து விட்டால், பாரபட்சமின்றி விளையாடுகிறார்கள்.
இப்போது வரை முகென் தான் பாயிண்ட் டேபிளில் முதலிடத்தில் உள்ளார். கடைசி இடத்தில் கவின் இருக்கிறார். இதுவரை கவின் 2 முட்டைகளை உடைத்திருக்கிறார். சேரனுக்கு முதுகு வலி என்றதும், முகென், தர்ஷன், சாண்டி ஆகியோர் அவரை பார்த்துக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. டாஸ்க்க்கில் சீறி விளையாடும் முகென், யாரையும் புண்படுத்தாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது!