Bigg Boss Tamil 3 Episode (97):கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3. மாதங்களை, வாரங்களை எண்ணிக்கொண்டிருந்த போட்டியாளர்கள் தற்போது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிக் பாஸ் ஃபினாலே நடக்க இருக்கிறது. இந்த நிலையில், 97ம் நாள் (28ம் தேதி) நிகழ்ச்சியில், கமல் ஹாசன், இறந்தவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல செல்லும் போது ஒரு 4 நாட்களுக்குப் பிறகு சென்று ஆறுதல் கூறுவது எனது பழக்கம். அப்போது தான் சொந்தக்காரர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். குடும்பத்தாரின் சோகத்தை நாம் தாங்கிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து போட்டியாளர்களின் டாஸ்க் தொடங்கியது. முதலில் ஏர்டெல் எக்ஸ்-ஸ்ட்ரீம் பாக்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சாண்டி, ஷெரின் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, காபி மக்கில் நெருங்கியவர்களுக்கு குறுஞ்செய்தி எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு மெசேஜ் எழுதினர். அதன் பிறகுதான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கவினின் வருகை இருந்தது. கமலை சந்தித்து பேசிய கவினுக்கு குறும்படம் போட்டு காட்டப்பட்டது.
எல்லாமே பிளான் பண்ணிதான் நான் செய்தேன். ஜெயிக்கணும் என்று யோசிக்கவில்லை என்று கவின் கூற, நீங்கள் இருந்திருந்தால் ரூ.5 லட்சம், ரூ.7.5 லட்சமாக மாறும், பின்னர் ரூ.10 லட்சமாக மாறும். ஆனால், நீங்கள் பணத்திற்காக வெளியேறவில்லை என்றார் கமல் ஹாசன்.
லாஸ்லியாவுக்கு கவின் அட்வைஸ் : ஹாய் லியா, ஆல் ஓகே….எல்லோருமே ஜாலியாக விளையாட்டிவிட்டு வாருங்கள் என்றார். பிளான் எல்லாம் சக்சஸா? அடி வெளுக்கப்போறேன் என்று சின்ன புன்னகையோடு லாஸ்லியா கவினை திட்டினார். ஆரம்பம் முதலே நன்றாக விளையாடிக்கொண்டிருந்த நீங்கள் என்னால், அதில், கவனம் செலுத்த முடியாமல், தவித்தீர்கள் அல்லவா? அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். இருக்கும் 4 நாட்களை அப்பாவுக்காகவும், எனக்காகவும் சேர்த்து விளையாடிவிட்டு பட்டர்ப்ளை மாதிரி வெளியில் பறந்து வாங்க என்று கவின் அட்வைஸ் கொடுத்தார் .
அதன்பிறகு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை பெற்ற கவின் மேடையை விட்டு வெளியேறினார். இறுதியில், சாண்டி மக்களால் பாதுகாக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி ; இவரும் வெளியேற்றமா?!!
பிக் பாஸ் வீட்டிலே போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தவர் தர்ஷன். இவர், தான் பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் ஹாசன் கூறிவருவது போல இந்த வாரம் அதிரடி திருப்பமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.