புதுசு புதுசா வர்றாங்க: பிக் பாஸ் தமிழ் லேட்டஸ்ட் அப்டேட்

2-வது ப்ரோமோவில் கமலின் ஸ்கிரீன் பிரெசன்ஸைப் பார்த்து ’வாவ்’ சொல்லாதவர்களே இல்லை எனலாம்.

biggboss, biggboss tamil 4, kamalhaasan, vijay television, promo, contestants, shivani narayanan, tiktok ilakkiya, vj chitra, poonam bajwa, shilpa manjinath, ramya pandian, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
பிக் பாஸ் தமிழ் 4

Bigg boss Tamil 4: மூத்த நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் 2 ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பங்கேற்பாளர்களின் பெயர்களையும், நிகழ்ச்சி தொடங்கும் நாளையும் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபத்திய தகவல் என்னவென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு கலந்துக் கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Shalu Shamu, Bigg boss Tamil 4
ஷாலு ஷம்மு

படப்பிடிப்பு தளங்களில் திரைப்பிரபலங்கள்: அரிய படத் தொகுப்பு!

ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், ஒரு சில பொழுதுபோக்கு இணையதளங்கள், பிக் பாஸில் போட்டியாளராக ஷாலு ஷம்மு இருப்பார் எனத் தெரிவிக்கின்றன.

அதோடு பிகில் பட நடிகை அம்ரிதா ஐயரும் பிக் பாஸ் செல்வதாக பேச்சுகள் எழுந்துள்ளன. சமூக வலைதள உரையாடலின் போது இதுகுறித்து அமிர்தாவிடம் கேட்டப்பட்டது. அதற்கு, “தெரில சஸ்பன்ஸாவே இருக்கட்டும்” என்று அம்ரிதா கூறியுள்ளார். இதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

”மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்கள் மீது இல்லாதது வருத்தமளிக்கிறது” திவ்யா சத்யராஜ்

எது எப்படியோ பிக் பாஸ் ப்ரோமோ வெளியானதிலிருந்தே, அது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2-வது ப்ரோமோவில் கமலின் ஸ்கிரீன் பிரெசன்ஸைப் பார்த்து ’வாவ்’ சொல்லாதவர்களே இல்லை எனலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 contestant shalu shamu amrita iyer

Next Story
‘நீங்க பிக் பாஸ் போறீங்களா?’ ரசிகர் கேள்வி; சஸ்பென்ஸ் சொன்ன விஜய் பட நடிகைbigg boss season 4, bigg boss, vijay tv, bigg boss amritha aiye, amirtha aiyer, bigil movie actress, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர், பிகில், விஜய், அம்ரிதா அய்யர், அமிர்தா அய்யர், vijay movie actress, amirtha, amritha, bigg boss season 4 contestant
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com