Bigg Boss Tamil 4: பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி, அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை 4-வது முறையாக கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
’எஸ்.பி.பி-யின் முதல் பாடல் எனக்கானது’ சிவகுமார் சுவாரஸ்யம்
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சாத்தியமான போட்டியாளர்கள் முதல் கமல்ஹாசனின் டீம் வரை, வரவிருக்கும் சீசனைப் பற்றி இதுவரை நாம் அறிந்தவைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
கமல் லுக்
நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், இந்த சீசனில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் காணப்படுவார். சமீபத்தில் வெளியான டீசர்கள் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
போட்டியாளர்கள்
ஒரு சில பிரபலமான பெயர்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. மிகவும் சாத்தியமான போட்டியாளர்களின் பட்டியலில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ரேகா ஹாரிஸ், அர்ச்சனா சந்தோக், கேப்ரியெல்லா சார்ல்டன், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஆஜீத் காலிக், வேல்முருகன், அனு மோகன், ஆரி அர்ஜுனா, பாலாஜி முருகதாஸ், மாடல் சோமேஷேகர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
நாட்கள்
பிக் பாஸ் தமிழ் 4, 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில், தயாரிப்பாளர்கள் வழக்கமான நிகழ்ச்சியாகவே இதனை கையாள முடிவு செய்துள்ளனர். அதாவது 100 நாட்கள், 15 அல்லது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.
டெக்னீஷியன்
கமல்ஹாசன் தனது சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இதில் பணிபுரிகிறார். பிக் பாஸ் தமிழ் 3 இறுதிப் போட்டியாளரான சாண்டி மாஸ்டர் டீஸருக்கு கொரியோகிராப் செய்த நிலையில், கமலின் நீண்டகால அஸோஸியேட்டான ஜிப்ரான், டீஸர் வீடியோவுக்கு இசையமைத்துள்ளார். ஸ்டைலிஸ்ட் அமிர்தா ராமும் கமலுடன் பணியாற்ற வாய்ப்புள்ளது.
கொரோனா விழிப்புணர்வு
கோவிட் -19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கமல்ஹாசன் மற்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்ட வாய்ப்புள்ளது. அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியின் டீஸர் வீடியோக்களில் தெளிவாகத் தெரிகிறது.
டாஸ்கில் மாற்றம்
கோவிட் -19 பரவலைக் குறைப்பதற்காக, விளையாட்டிலும், போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் பணிகளிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. போட்டியாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படும். ரேஷன் மற்றும் உடைகளை வழங்குவதற்கு முன்பு முற்றிலும் கிருமி நாசினி செய்யப்படும்.
ட்ரெம்ப், மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
நோ நேரலை பார்வையாளர்கள்
வழக்கமானதைப் போல் இல்லாமல், வார இறுதி எபிசோடுகள் நேரடி பார்வையாளர்கள் செட்டில், இருக்க மாட்டார்கள். COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது செயல்படுத்தப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”