’என்ன அவ்ளோ இன்சல்ட் பண்ணிருக்காங்க’ கண்ணீர் விட்ட சம்யுக்தா

நிஷா எழுந்து நின்று சோம் மற்றும் ஆரி ஆகியோரை பரிந்துரைப்பதாக கூறினார்.

Bigg Boss Tamil 4 Promo, Samyuktha
Bigg Boss Tamil 4 Samyuktha

Bigg Boss Tamil 4 Promo:  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி 32 நாட்களை கடந்து இருக்கிறது. நடிகை ரேகாவும், பாடகர் வேல்முருகனும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மற்றவர்கள் தங்கள் கேமை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

கேரள போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடல் தேனியில் அடக்கம்

இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்படி, பிக் பாஸ் உத்தரவிடுகிறார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க விவாதித்து கொண்டிருக்கின்றனர்.

நிஷா எழுந்து நின்று சோம் மற்றும் ஆரி ஆகியோரை பரிந்துரைப்பதாக கூறினார். மற்ற போட்டியாளர்கள் பலரும் சோமுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். அதன் பின் ஆரிக்கு ஆதரவாகவும் பலரும் பேசுகிறார்கள். ஆரி பேசியதை கேட்கும்போது எனக்கே புல்லரித்தது என அனிதா சப்போர்ட் செய்கிறார்.

அவ்ளோ பயன்கள் இருக்கு… இதை தவிர்க்காதீங்க! அரைக் கீரைக் குழம்பு செய்முறை

அதனால் அவர்கள் இருவரும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு செல்கிறார்கள் என தெரிகிறது. இதனையடுத்து, ‘ஏன் இப்படி சொல்கிறார்கள் என எனக்கு புரியவில்லை’ என பாலாஜியிடம் கூற, அதற்கு அவர் ‘ஏன்னா பாலாஜி இந்த வீட்ல கார்னர் செய்யப்பட்டு இருக்கிறார்’ என சொல்கிறார்.

அடுத்த ப்ரோமோவில், ‘ஆரி கோர்ட் ரூம்ல கத்துனது யாருக்குமே தப்பாவே தெரிலயா? எல்லாரும் சூப்பரா பேசினாருன்னு கைய தூக்குறாங்க. என் மேல எதாச்சும் மிஸ்டேக் இருக்கான்னு தெரில, என ஆஜித்திடம் சொல்லி அழுகிறார் சம்யுக்தா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo aari som balaji best performance

Next Story
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை தடை செய்யக் கோரி புகார்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?mookuthi amman movie tamil nayanthara rj balaji
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com