பெண்களுக்கு எதிராக பேசினாரா பாலா? பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சர்ச்சை

புடிச்சவங்க சொல்றத எடுத்துக்கறதா, இல்ல நாம நினைக்கிறத பண்றதான்னு ஒரு போராட்டம்.

புடிச்சவங்க சொல்றத எடுத்துக்கறதா, இல்ல நாம நினைக்கிறத பண்றதான்னு ஒரு போராட்டம்.

author-image
WebDesk
New Update
Bigg Boss 4 Tamil Vijay tv Bala Sanam Archana Rio Review Day 24 

Bigg Boss 4 Tamil Rio, Bala, Archana

Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் தமிழ் 4-ம் சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பதினாறு போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட போட்டியில், பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனாவும் உள்ளே சென்றார். முதல் ஆளாக ரேகா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

Advertisment

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கன்பெஷன் ரூமில்  அமர்ந்திருக்கும் அனிதா, தனது பிரச்னைகளை சொல்லி அழுகிறார். "நான் ரொம்ப தனியா இருக்க மாதிரி இருக்கு. பொதுவா நான் ஜாலியான டைப். பிரச்னை வந்தா என் பக்கம் யாரும் நிக்காத மாதிரி ஒரு கஷ்டம். புடிச்சவங்க சொல்றத எடுத்துக்கறதா, இல்ல நாம நினைக்கிறத பண்றதான்னு ஒரு போராட்டம். மனசளவுல ஒரு நெகட்டிவ் ஃபீல் மைண்ட்ல இருந்துக்கிட்டே இருக்கு. என் கிட்ட தான் பிரச்னை போலன்னு, ஒரு குழப்பம்” என கூறியவாறு கதறி அழுகிறார் அனிதா.

Advertisment
Advertisements

இரண்டாவது ப்ரோமோவில், ”அடுத்த வாரம் முழுக்க அம்மில அரைக்க விட்டுக்கிட்டே இருப்பேன்னு அங்க வச்சி சொன்னாரா இல்லையான்னு கேளுங்க” என கோபமாகிறார் அர்ச்சனா. “ஆமா நான் சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு” என்கிறார் பாலாஜி. ”எல்லாரையும் அம்மில அரைக்க விடுறேன்னா, அப்ப இங்க இருக்கவங்கள எல்லாம் என்ன நெனச்சிங்க” என கேட்கிறார் ரியோ. ”பொம்பளைங்கள அம்மில அரைக்க விடுறேன்னா” என்ன அர்த்தம் என்கிறார் நிஷா. பாலாஜி தான் சொன்னதில் தவறேதும் இல்லை என்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: