Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் 4 வீட்டில் கடந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் தான் கலைகட்டி இருந்தது. அதனால் எலிமினேஷன் இல்லை என முன்பே அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில் வரும் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் இன்று நடக்கிறது.
அந்த ப்ரோமோவில், பெரும்பாலான போட்டியாளர்கள் அனிதா மற்றும் சுசித்ராவையும் தான் நாமினேட் செய்திருக்கிறார்கள். அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்திருக்கிறார்கள். அனிதா சிடுமூஞ்சியாக இருக்கிறார் என காரணம் சொல்கிறார் சம்யுக்தா. சுசித்ரா எந்த மூடில் இருக்கிறார் என தெரியவே மாட்டேங்குது என ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் செய்திருக்கிறார்கள். ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் ஒருவருக்கொருவர் நாமினேட் செய்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது ப்ரோமோவில், நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பதை அறிவிக்கிறார் பிக் பாஸ். அதில் பாலாஜி காதல் கண்ணை மறைக்கிறது என சொன்ன காரணமும் குறிப்பிடுகிறார். இதனால் பாலாஜி கோபம் அடைகிறார். "கேட்டுக்கங்க பா இங்க காதல் எல்லாம் ஒன்னும் பண்ணல. அது போன்ற எண்ணம் இருந்தால், அது பற்றி நான் காதில் கேட்டால், ஏதாவது கேட்பேன்" என அனைவரிடமும் கோபத்துடன் கிளம்பி செல்கிறார். அதன் பின் பெட்ரூமில் ஷிவானியிடம், 'சப்போஸ் காதல் வந்தா நான் உன் கிட்ட சொல்றேன் சரியா. அது வராது.. வந்தால் சொல்றேன்’ என்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”