’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனா

’என் பேர காலி பண்ண, ஒரு பொண்ணு பேர வச்சி என்னெல்லாம் செஞ்சீங்க’ என பாலா கோபமாகிறார்.

By: November 24, 2020, 1:22:49 PM

Bigg Boss Tamil 4 Promo:  நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. போன வாரம் வழங்கப்பட்ட மணிக்கூண்டு டாஸ்க் காற்று மழை என அனைத்தையும் தாண்டி நடைபெற்றது. அதே போல் இந்த வாரம் கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் சிலர் கால் சென்டர் ஊழியர்களாக மாறி இருக்கின்றனர். மற்றவர்கள் போன் செய்து கேள்வி கேட்கும் நபர்களாக இருக்கின்றனர். அப்போது பாலாஜிக்கு கால் செய்யும் அர்ச்சனா, ‘உங்களுக்குப் பிடிச்சவங்கள முன்னிறுத்தி விளையாடுறேன்னு சொல்லிருந்தீங்க, அவங்க பேர் தெரிஞ்சுக்கலாமா’ என்கிறார். அதற்கு பாலாவோ, ‘சோம், ரியோ, கேபி’ என்கிறார்.

அடுத்த ப்ரோமோவில், ’நா உங்கள பத்தி யார் கிட்டயும், எதையும் சொன்னதில்ல, எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க’ என கேப்ரியல்லா சண்டை போடுகிறார். ’என் பேர காலி பண்ண, ஒரு பொண்ணு பேர வச்சி என்னெல்லாம் செஞ்சீங்க’ என பாலா கோபமாகிறார். ’என்ன அக்கான்னு கூப்பிடாத, அர்ச்சனான்னு கூப்பிடு’ என்கிறார் அர்ச்சனா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 promo balaji archana vijay tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X