ஹவுஸ் மேட்ஸ் பொழுது போக்க பிபி எஃப் எம்!

கேங்காக லூசு பெண்ணே பாடலை பாடுகிறார்கள்.

கேங்காக லூசு பெண்ணே பாடலை பாடுகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 promo

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 4: பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் வேறு பக்கத்தை ரசிகர்களுக்கு காட்டுகிறது. மகிழ்ச்சி, துக்கம், அழுகை, வெறுப்பு, ஏமாற்றம், வலி என அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப விஜய் டிவி-யின் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisment

வீடியோவால் வந்த வினை: பாம்பை துன்புறுத்தினாரா சிம்பு?

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் இரு குழுவாக பிரிந்து அந்தாக்ஸரி விளையாடுகிறார்கள். ஒரு டீம் முதலில் மன்மத ராசா பாடலை பாடுகிறார்கள். அதன் பின் லூசு பெண்ணே பாடலை பாடுகிறார்கள். பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி இருவரும் பெட்டில் தனியாக அமர்ந்து எதோ பேசிக்கொண்டு இருக்க, அவர்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த விளையாட்டு இருக்கிறது.

அடுத்த ப்ரோமோவில் பிக் பாஸ் எப்ஃஎம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் அர்ச்சனாவும், சுசித்ராவும் ஆர்.ஜே-க்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் ஃபோன் செய்து அவர்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு, கலாய்கிறார்கள். இது ரொம்பவும் ஃபன்னாக இருக்குமென தெரிகிறது.

3-வது ப்ரோமோ-வில் ஹவுஸ் கேப்டன் சம்யுக்தாவை அழைத்து, யாரும் ஆங்கிலத்தில் பேசாதவாறு பார்த்துக் கொள்ளும்படி பிக் பாஸ் கட்டளையிடுகிறார். ‘இது எனக்கு, சுச்சி மற்றும் அர்ச்சனாவுக்கு தான் போல’ என்பதை ஆங்கிலத்தில் சொல்கிறார் சம்யுக்தா. சின்ன சின்ன விஷயங்களுக்கும் தமிழ் தெரியாமல், அல்லாடுகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: