’சிம்ப்ளி வேஸ்ட்’, ‘நமத்துப்போன பட்டாசு’, ‘ஆமா சாமி’: அர்ச்சனா கொடுத்த பட்டம்!

அர்ச்சனா பிக் பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

By: Updated: October 15, 2020, 04:33:37 PM

Bigg Boss Tamil 4 Promo: 16 போட்டியாளர்களுடன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர், நடிகைகள், பாடகர்கள், மாடல், டிவி பிரபலங்கள் என அதில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி இன்று நடந்திருக்கிறது. அவர் வேறு யாருமல்ல, தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா தான்.

அவரை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். அர்ச்சனா பிக் பாஸ் 4 துவக்க நிகழ்ச்சி அன்றே போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அவர் வரவில்லை. கடந்த சில தினங்களாக அர்ச்சனா தனிமை படுத்தப்பட்டு இருக்கிறார் என செய்திகள் வந்த நிலையில் தற்போது பிக் பாஸில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், “எத்தனை பேருக்கு சாரின் (சுரேஷ் சக்கரவர்த்தி) சமையல் பிடிக்கவில்லை” என அர்ச்சனா கேட்கிறார். அதற்கு பதில் கூறிய ரியோ ‘சமையல் மட்டும் தான் பிடிக்கும் அதனால் கைதூக்க முடியல’ என தெரிவித்தார். அதன் பின் ‘எவன் அவன்’ என அர்ச்சனா கேட்கிறார். ‘நீங்கள் சொன்னவனிடம் தான் கேட்க வேண்டும்’ என சுரேஷ் கூறுகிறார். ‘நீங்க கேட்டு சொல்றீங்களா’ என அர்ச்சனா கேட்க, ‘இப்போ அனுப்பினீங்கனா போய்ட்டு கேட்டு வந்துருவேன்’ என சொல்கிறார் சுரேஷ்.

மேலும் உங்களுக்கு திருஷ்டி பட்டுவிடுகிறது என சொல்லி அவருக்கு சுத்தி போடுகிறார் அர்ச்சனா. ‘நீங்க பல வருஷமா anchor ஆக இருந்திருக்குமே.. என்ன ரியோ’ என க்ரூப் ஆக சேர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தியை கலாய்த்து இருக்கின்றனர்.’I was an anchor’ என சுரேஷ் பதில் சொல்ல, அதன் பின் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்கள் கிண்டலாக சிரிக்கிறார்கள். இதனால் சுரேஷ் சக்ரவர்த்தி கோபமாகி அங்கிருந்து செல்கிறார். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய 3-வது ப்ரோமோவில், வெளியில் இருக்கும் ரசிகர்களின் ரியாக்‌ஷனை ஒவ்வொரு பட்டத்தின் மூலம் தெரிவிக்கிறார் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற அர்ச்சனா. ‘நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்’ என்ற பட்டத்தை பாலாஜி முருகதாஸுக்கும், ஷிவானிக்கு Atmosphere ஆர்ட்டிஸ்ட் எனவும், ரம்யா பாண்டியனுக்கு சவாலான போட்டியாளர் என்றும், அனிதாவுக்கு ‘BBT4 ட்ரெண்டிங்’ என்ற பட்டத்தையும் அர்ச்சனா கொடுத்திருக்கிறார். ஆனால் அனிதாவுக்கு கொடுத்தது பாசிட்டிவ் இல்லை என குறிப்பிட்டார். நிஷாவுக்கு ‘ஆமா சாமி’ பட்டமும், சனம் ஷெட்டிக்கு ‘நமத்து போன பட்டாசு’ என்ற பட்டத்தையும் கொடுத்த அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு என்ன பட்டம் கொடுப்பார் என்ற எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 promo bigg boss archana

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X