Bigg Boss Tamil 4 Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் யார் குறைந்த நேரத்தில் சரியான மணி நேரத்தை கணிக்கிறார்கள் அவர்கள்தான் இந்த டாஸ்கின் வெற்றியாளர்கள். அதன்படி, மிகக் குறைந்த வித்தியாசத்தில் நேரத்தை கணித்து அர்ச்சனா குழுவினர் வெற்றி பெற்றார்கள். இந்த டாஸ்கை மிக மோசமாக செய்தவர்களாக பாலாஜி, சுசித்ரா, ரம்யா குழுவினர் இடம் பெற்றனர். குறிப்பாக டாஸ்க் நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார் பாலாஜி.
#BiggBossTamil இல் இன்று.. #Day48 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/lM3sy8GqL8
— Vijay Television (@vijaytelevision) November 21, 2020
இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், ”நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள், நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார்” என்கிறார் கமல். மேலும் தொடர்ந்த அவர், ”நீங்கள் விழிப்புடன் இருந்தால் மாற்றங்கள் நிகழும்” என்கிறார். ”உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது, என்பதை பார்க்கலாம், என்று இரவு!” என்று கூறுகிறார்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss tamil 4 promo kamal haasan balaji vijay tv