/tamil-ie/media/media_files/uploads/2020/11/Bigg-Boss-Tamil-4-Promo-2-1.jpg)
Bigg Boss 4 Tamil Bala and Shivani
Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த மணிக்கூண்டு டாஸ்க் இன்று முடிவுக்கு வருகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஐந்து அணிகளாக பிரிந்து நேரத்தை கணிக்க வேண்டும். மிகக் குறைந்த வித்தியாசத்தில் யார் நேரத்தைக் கணிக்கிறார்களோ அவர்கள் தான் இதன் வின்னர். காற்று, மழை, வெயில், குளிர் என பொருட்படுத்தாமல் போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கை செய்து முடித்து இருக்கிறார்கள்.
இவ்ளோ இளமையான அம்மா எங்கயாச்சும் இருக்காங்களா? ’கண்ணான கண்ணே’ நித்யா தாஸ்
#Day46#Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/mzbcA69ePZ
— Vijay Television (@vijaytelevision) November 19, 2020
இதில் யார் வெற்றியாளர் என்பதை தற்போது பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். அது முதல் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் முடிவை தெரிந்துகொள்ள மிகவும் பீதியில் அமர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அணியும் கணித்த நேரம் பற்றி வரிசையாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் பிக் பாஸ். அர்ச்சனா டீம் தான் மிகவும் குறைந்த அளவு வித்யாசத்தில் கணித்திருப்பதாக தெரிகிறது. அதனால் அவர்கள் டீம் இதில் வெற்றி பெற்றிருக்கிறது.
#Day46#Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4#BiggBossTamil4#VijayTelevisionpic.twitter.com/X8nybT0uhE
— Vijay Television (@vijaytelevision) November 19, 2020
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, இந்த வீட்டிலேயே ஷிவானிக்கு இருக்கும் ஒரே வேலை, பாலாவ எண்டெர்டெயின் பண்றது தான், என்று சொல்லி மூவரும் சிரிக்கிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.