களைகட்டும் நவராத்திரி கொண்டாட்டம்: 4 மணிநேர பிக் பாஸ் நிகழ்ச்சி!

இரண்டாவது ப்ரோமோவில், எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது.

Bigg Boss Tamil 4 Promo
Bigg Boss 4 Tamil Vijayadasami Celebrations

Bigg Boss Tamil Promo: பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக பிக் பாஸ் சீசன் 4-ல் “நவராத்திரி கொண்டாட்டம்” நடந்துக் கொண்டிருக்கிறது. 4 மணி நேர நிகழ்ச்சியாக, இன்று மாலை 6.30 மணியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் விஷயத்தை நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாசன் சொல்லியிருந்தார். அதை மையமாக வைத்து இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

’நடிகை, மேக்கப் ஆர்டிஸ்ட், டிஸைனர், பேக்கர்’: செம்பருத்தி ஐஸ்வர்யா!

போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து, பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே மகிழ்ச்சியுடன் நின்று விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 மணி நேர அறிவிப்பை அனிதா கூறுகிறார். ரியோவும், வேல் முருகனும் வீட்டை அலங்கரிக்க, கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுகிறார் ரம்யா. மறுபுறம் அர்ச்சனாவும், சுரேஷ் சக்ரவர்த்தியும் சமையலறையில் பிரசாதம் தயார் செய்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்க, தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் இருவரையும், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த படங்களை எரியும் நெருப்பில் போட வேண்டும் என உத்தரவிடுகிறார் பிக் பாஸ். இதில் நிறையப் பேர் பாலாஜியை நாமினேட் செய்கிறார்கள். குறிப்பாக பாலாஜி ரியோவையும், ரியோ பாலாஜியையும் மாற்றி மாற்றி நாமினேட் செய்கிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo navarathiri celebration rio balaji

Next Story
‘வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா’ சூரரைப் போற்று மாஸ் ட்ரெய்லர்suriya, soorarai pottru, soorarai pottru, suriya's soorarai pottru trailer, soorarai pottru trailer released, சூரியா, சூரரைப் போற்று, சூரரைப் போற்று ட்ரெய்லர் வெளியீடு, ரசிகர்கள் வரவேற்பு, சூரியாவின் சூரரைப் போற்று, fans netizens reactions to soorarai pottru trailer, 2d entetainment, amazon prime ott, சூரரைப் போற்று நவம்பர் 12-ம் தேதி வெளியீடு, suriya, soorarai pottru movie will be released on november 12, diwali deepawali, soorarai pottru
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com