’நடிகை, மேக்கப் ஆர்டிஸ்ட், டிஸைனர், பேக்கர்’: செம்பருத்தி ஐஸ்வர்யா!

அந்த சீரியலில் முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜனனி.

Sembaruthi Serial Janani Ashok Kumar
ஜனனி அசோக் குமார்

Tamil Serial News:  வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் பலர் திகழ்கிறார்கள். குறுகிய காலத்திலேயே சின்னத்திரை நடிகைகள் பலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. அதற்கு அவர்களின் நடிப்பு முக்கியமானதாக கருதப்பட்டாலும், இரண்டாவதாக அவர்களது இணையதள படங்களையும் சொல்லலாம். இந்த பட்டியலில் நடிகை ஜனனி அசோக்குமாருக்கு முக்கிய இடமுண்டு.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
உடலைக் குறைத்து ஸ்லிம் அண்ட் சிக்காக ஜனனி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார் இவர். கோயம்புத்தூரை பூர்விகமாகக் கொண்ட ஜனனி முதல் சீரியலிலேயே பட்டையைக் கிளப்பினார். அதன் பின் ‘ஆயுத எழுத்து’, ‘செம்பருத்தி’ என ஜனனியின் சீரியல் பயணம் தொடர்கிறது.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம்

உண்மையில் ஜனனியின் நடிப்புப் பயணம் தொடங்கியது என்னவோ சினிமாவில் தான். ஆம்! நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார் அவர். இருப்பினும் அவரை கவனிக்க வைத்தது என்னவோ, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடர் தான்.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
ஸ்டன்னிங் தோற்றம்

அந்த சீரியலில் முத்த காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜனனி. தற்போது செம்பருத்தி சீரியலில், ஆதியின் தம்பி மனைவியாக நடித்து வருகிறார். சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
ஜனனி அசோக் குமார்

நடிப்பைத் தவிர மேக்கப் போட்டு வித விதமான படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது, மேக்கப் மற்றும் பியூட்டி டிப்ஸ்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துக் கொள்வதென பிஸியாக இருக்கிறார் ஜனனி. சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்து, ஸ்டைலிஷாக மாறியிருக்கும் அவர், அதற்குக் காரணம் உடற்பயிற்சி தான் என்கிறார்.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
தென்னை மரங்களுக்கிடையே சொந்த ஊரில்…

உணவில் பால் பொருட்களை தவிர்த்து வரும் ஜனனி அசைவ உணவுகள், டீ, காஃபி, கூல் ட்ரிங்ஸுகளுக்கு குட் பை சொல்லி விட்டாராம். அதோடு பழம், காய்கறிகளை அதிகம் சாப்பிடும் இவர், 4 மணிநேர சாப்பாடு மற்ற நேரம் தண்ணீர் என்ற உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாராம்.

Janani Ashok Kumar, sembaruthi serial actress janani ashok kumar
படபிடிப்பு தளத்தில் சீரியல் தோற்றத்துடன்

அதே நேரத்தில் கேக், குக்கீஸ் என பேக்கிங்கில் ஜனனிக்கு ஆர்வம் அதிகம் என்பதால், ஓய்வு நேரத்தில் அதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜனனி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Janani ashok kumar sembaruthi serial aishwarya tamil serial news

Next Story
மனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபிCurryleaves kariveppilai kuzhambu recipe healthy food tamil 
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com