Advertisment

பிக் பாஸ் கொடுத்த தீபாவளி டாஸ்க்: கண்ணீர் விட்ட போட்டியாளர்கள்

‘என்ன எல்லாரையும் சொல்லிட்டாரு?’ என்பது போல சிரிக்கிறார்கள் ஹவுஸ் மேட்ஸ்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 Promo 2

Bigg Boss Tamil 4 Promo 2

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்குக் காரணம், மக்களின் வாக்குகள் அடிப்படையில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப் படுவதாக கமல் அறிவித்தார். இதை யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களில் சிலரும் அதிர்ச்சி ஆனார்கள்.

Advertisment

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியுஸ்.. அந்நியாத்திற்கு குறைந்த காய்கறி விலை மார்கெட்டுக்கி ஜூட் விடுங்க!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் வெளியே வந்து வரிசையில் நிற்கிறார்கள். அப்போது, ”இந்த வார எலிமினேஷன் ப்ராசஸுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள பெயர்கள், கேபி, சம்யுக்தா, சுசித்ரா, அனிதா, பாலாஜி, ஷிவானி, அர்ச்சனா, ரம்யா, ஆஜித்” என்கிறார் பிக் பாஸ் இதைக் கேட்ட போட்டியாளர்கள், ‘என்ன எல்லாரையும் சொல்லிட்டாரு?’ என்பது போல சிரிக்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில், ”அடுத்த வாரம் தீபாவளி வர உள்ளதால் அதை பிக் பாஸ் வீட்டினருடன் மட்டுமின்றி நீங்கள் சேர்ந்து கொண்டாட விரும்பும் ஒரு நபருக்கு நீங்கள் கடிதம் எழுத வேண்டும்” என்கிறார் பிக் பாஸ். அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள். இந்த டாஸ்க்கில் பலரும் கண்ணீர் விடுகிறார்கள். சம்யுக்தா தன் மகனை நினைத்து அழுகிறார். அர்ச்சனா உள்ளிட்ட மற்றவர்களும் கண் கலங்குகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment