Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக நடந்துவரும் கால் சென்டர் டாஸ்க், வீட்டில் பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
#Day54 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/tjWuuKVyyv
— Vijay Television (@vijaytelevision) November 27, 2020
அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில், “ரியோ முகத்தை பார்த்து குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லை, அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி இருக்கிறது. அப்படியே பிரிஞ்சிடுச்சி” என்கிறார் சனம். ‘இதற்கு நிறைய effort போட்டாச்சு. எனக்கு டையர்டாகி விட்டது. எனக்கு போதும்’ என ரியோ சொல்ல, இது எண்ட் பாயிண்ட் என வைத்துக் கொள்வோம், என்கிறார் சனம். நேற்றைய எபிசோடில், ஆஜித்துக்கு ஃபோன் செய்த ரியோ அனிதா-சனம் நட்பு குறித்து பேசியது பிரச்னையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் கால் சென்டருக்கு ஃபோன் செய்கிறார் ஆரி. அந்த ஃபோனை ஷிவானி எடுக்கிறார். ‘எனக்கு வேற வழியே இல்ல, நீங்க தான் கிடைச்சீங்க என்று தொடங்கும் ஆரி, இந்த வீட்ல அதிக நேரம் நீங்க யார் கூட செலவிடுறீங்க? காதல் கண்ண மறைக்குதுன்னு சொன்னது நான் தான். பாலா மேல நீங்க வச்சிருக்கது அன்பா? காதலா? என்கிறார். நிச்சயம் இதுவும் ஒரு பிரச்னையை உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”