Advertisment

பிக் பாஸ் ஒளிபரப்பிய வீடியோ: கதறி அழுத சம்யுக்தா

சம்யுக்தா மற்றும் ஆரி இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது.

author-image
WebDesk
New Update
Bigg Boss tamil 4 Promo vijay tv

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 4 Promo: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பாடகர் வேல்முருகன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அதே நேரத்தில், பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சம்யுக்தா மற்றும் ஆரி இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. ‘எல்லாரையும் கார்னர் செய்றாருங்கறதுல உண்மையே கிடையாது’ என சம்யுக்தா சொல்ல, ’ஒரு கேப்டனுக்கான ரெஸ்பான்ஸ்பிலிட்டியே இல்லாம இருக்காங்க’ என ஆரி கூறுகிறார். இடையில் பாலாஜி வேறு ஆரியின் கோபத்தைத் தூண்டுகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், பாலா-ஷிவானியின் அசைவுகளை வைத்து லவ் ட்ராக்கை முயற்சிக்கிறார் பிக் பாஸ். எமோஜியை கையில் வைத்துக் கொண்டு, கண்ணு இங்க இருக்கு, ஹார்ட் எங்க? என அவர்களைப் பற்றி, கேபியிடம் கூறுகிறார் ஆஜித். பின்னணியில் ’அந்த கண்ண பாத்தாக்க லவ்வு தானா தோணும் டா’ என்ற விஜய்யின் பாடல் ஒளிபரப்பாகிறது. ஷிவானி பாலாவுக்கு ஊட்டி விடுகிறார், தலையை மசாஜ் செய்கிறார். இப்போ நான் போய் அவங்கள தொந்தரவு செய்றேன் என கேபியிடம் சொல்லிவிட்டு, அங்கு செல்கிறார் ஆஜித்.

மூன்றாவது ப்ரோமோவில், சம்யுக்தாவின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு, அந்த வீடியோவை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் திரையில் ஒளிபரப்புகிறார்கள். அதைப் பார்த்த சம்யுக்தா கதறி அழுகிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment