சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலை

கேபி உடனே ‘I hope you win’ என கூறி லைனை துண்டித்துவிட்டார்.

Bigg Boss Tamil 4 Promo
Bigg Boss Tamil Gaby Som

Bigg Boss Tamil 4 Promo: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பாதி போட்டியாளர்கள் கால் சென்டர் பணியாளர் போலவும், மீதம் இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர் போலவும் இருப்பார்கள்.

இன்றைய ப்ரோமோவில், கால் சென்டரில் இருக்கும் கேப்ரியல்லாவுக்கு கால் செய்து பேசுகிறார் சோம். மற்றவர்களை போல கோபத்துடன் எதுவும் பேசாமல், கேப்ரியல்லாவின் நாய் பற்றி பேசினார் சோம். மேலும் ஒரு கட்டத்தில் போனை வைத்துவிடு என சோம் கூறியதால், கேபி உடனே ‘I hope you win’ என கூறி லைனை துண்டித்துவிட்டார்.

சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற தான் கேபி இப்படி வேண்டுமென்றே செய்திருக்கிறார். ‘நேற்று நான் சொன்னது உறுதியாகி விட்டது’ என பாலாஜி குற்றம் சாட்டுகிறார்.

அடுத்த ப்ரோமோவில், சனம் ஷெட்டிக்கும் ரியோவுக்கும் மோதல் முற்றுகிறது. ’உங்க ரெண்டு பேருக்கும் உள்ள ப்ரெண்ட்ஷிப் ரொம்ப அழகா இருக்குன்னு நான் சொன்னேன்’ என்கிறார் ரியோ. ‘சொல்றத எல்லாம் சொல்லிட்டு, பிளே பாஸிட்டிவ்ன்னு சொல்றத ஒத்துக்குற அளவுக்கு நா முட்டாள் இல்ல சார்’ என்கிறார் சனம். இதைப் பார்த்து பாலாவும் ஷிவானியும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo som gabi rio sanam balaji

Next Story
’இனி நீ என்ன அக்கான்னு கூப்பிடாத’ கோபமான அர்ச்சனாBigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com