’எனக்கு மேடத்துடன் தான் பிரச்னை’: ஓயாத அனிதா – சுரேஷ் சக்ரவர்த்தி சண்டை

”சொல்லப் போன என் வீட்ல நான் தான் பேரண்ட், அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் கொழந்த மாதிரி.”

anitha sampath husband bigg bos anitha sampath
anitha sampath husband bigg bos anitha sampath

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி எப்படி இருந்தாலும், அது குறித்து வெளியிடப்படும் ப்ரோமோக்களுக்கு, ரசிகர்களின் ஆதரவும், எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.

டான்ஸ், ஆக்டிங் மட்டுமில்லை கேப்ரில்லாவுக்கு ஓவியமும் கைவந்த கலை!

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ-வில், “எனக்கு வந்து ஆக்சுவலா அட்ரஸே கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்சிருக்கேன் என் பேர. அத கெடுத்துக்கக் கூடாதுன்னு இருக்கேன். நமக்குன்னு ஒரு வீடு இருந்தா நல்லாருக்கும்ன்னு இருக்கும், எதாச்சும் ஃபில் பண்ணா கூட எனக்கு அட்ரெஸ் தெரியாது. சொல்லப் போன என் வீட்ல நான் தான் பேரண்ட், அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் கொழந்த மாதிரி. அவ்ளோ கஷ்டப்பட்டு என் லைஃபை நான் கடந்து வந்திருக்கேன்” என அழுதுக் கொண்டே கூறுகிறார் அனிதா. இதுவரை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களில் யார் எதற்கெடுத்தாலும் அழுகிறார்களோ, இறுதியில் அவர்கள் தான் விஷ மூட்டையாக இருப்பார்கள். இந்த விதியை அனிதா பொய்யாக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


அடுத்த ப்ரோமோவில், ”அவருக்கு ப்ரோமோவுல வரணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னப் பத்தி பேசுனா அவரும் சேர்ந்து ப்ரோமோவுல வருவாரு, ஃபேமஸ் ஆகணும்ன்னு ட்ரை பண்ணிட்டு இருக்காரு” என சுரேஷ் சக்ரவர்த்தியைப் பற்றி சோமிடம் கூறுகிறார் அனிதா. மறுபுறம், “ஐ லவ் ஆல் ஆஃப் யூ. உங்கள புண்படுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க. நான் கடுமையான போட்டியாளரா இருந்து, போராடி யார் ஜெயிச்சாலும் நான் ஜெயிச்ச மாதிரி நினைச்சுக்குவேன்” என்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. முதல் வாரத்திலேயே அனிதாவுக்கும், சுரேஷுக்கும் எழுந்திருக்கும் மோதல் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

விஜய் டிவி வெளியிட்ட 3-வது ப்ரோமோ-வில், ’சுரேஷ் சார் என்னோட டீம்ல இருந்து போறதுல எனக்கு சுத்தமா இண்ட்ரெஸ்ட் இல்ல’ என்கிறார் ரேகா. ’நீங்க இல்லன்னா நானும் அந்த டீம்ல இல்ல’ என சுரேஷ் சக்ரவர்த்தியிடம் சனம் கூறுகிறார். ’ஐ ஹேவ் பிராப்ளம் வித் மேடம், திஸ் மேடம்’ என அனிதாவை குறிப்பிடும் சுரேஷிடம், காரணம் கேட்கிறார் அனிதா. ‘நா சொல்ல முடியாதும்மா.. உங்களுக்கு குறும்படம் தான் வேணும்’ என்கிறார் சுரேஷ். இதை நிஷாவிடம் கூறும் அனிதா, ‘நான் எதாவது செஞ்சனா அக்கா, நான் என்னக்கா பண்ணேன்’ என அழுகையை ஆரம்பிக்கிறார் அனிதா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 4 promo today anitha sampath crying

Next Story
இதெல்லாம் ஒரு படமா? கோபத்தில் கொந்தளித்த பாரதிராஜா, லட்சுமி ராமகிருஷ்ணன்Irandam Kuththu Teaser Lakshmi Ramakrishnan, Bharathiraja, Santhosh Jayakumar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com