’அவர் ட்ரிக்கர் பண்ண பாக்குறாரு’ ஆவேசமான அனிதா

’நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்மா’ என சுரேஷ் சொல்ல, ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னா, அப்போ எருமை மாட்டுக்கு எத்தன சூடு’ என்கிறார் பாலாஜி.

By: Updated: October 7, 2020, 03:49:11 PM

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. 4-வது முறையாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இதில் பதினாறு போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

போட்டியாளர்களுக்கு நேற்று ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மற்றும் இந்த இடத்திற்கு வர அவர்கள் செய்தது பற்றி பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கை பற்றி பேசினார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில்,’கடந்து வந்த பாதை’ டாஸ்கில் போட்டியாளர்கள் சொன்ன கதையில் சரியில்லாத நான்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அடுத்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்துப் பேசும் பாலாஜி, “மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிய வலி மிகுந்த கதையை சனம் ஷெட்டி கூறினார். ஆனாலும், ஆரி ப்ரோ, சொன்ன கதை 10 பேரை ஊக்குவிக்கும் ஒன்றாக உள்ளது. அதனால், ரேகா மேம், சனம், சம்யுக்தா, கேப்ரில்லா” என நால்வரின் பெயரை பாலாஜி முருகதாஸ் கூற, நீங்க தான் அடுத்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட முதல் 4 நாபர்கள் என்கிறார் பிக் பாஸ். இது வரை இல்லாத வகையில் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது, ஒருபுறம் ஆதிசயமாகவும், மறுபுறம் அதிர்ச்சியாகவும் உள்ளது. போட்டியாளர்கள் வாழ்க்கையில் கஷ்டம் இல்லை என்பதற்காக அவர்களை நாமினேட் செய்வீர்களா என கோபத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அடுத்து வெளியான ப்ரோமோவில், ‘உன்ன பேசாதன்னு சொன்னேன்’ என்கிறார் சுரேஷ். ‘அப்படி எல்லாம் இருக்க முடியாது’ என அனிதா கூற, ‘மரியாதை கொடு’ என்கிறார் சுரேஷ். ‘நான் மேம் கிட்ட பேசுறேன். சாரி… சாரி…” என்கிறார் அனிதா. ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்மா’ என சுரேஷ் சொல்ல, ’நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னா, அப்போ எருமை மாட்டுக்கு எத்தன சூடு’ என்கிறார் பாலாஜி. ’பெரியவங்களுக்கும், அவளுக்கும் ஏதோ பிரச்னை. இதுல என்னங்க சின்னப் பொண்ணு, பெரிய பொண்ணு, அடல்ட்டுங்க’ என ரேகாவிடம் கூறுகிறார் சுரேஷ்.

தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ-வில், அனிதா சம்பத் – சுரேஷ் சக்ரவர்த்தியுடனான மோதல் இன்னும் தொடர்ந்து வருவதாக தெரிகிறது. மேலும் சுரேஷ் தன்னை தவறாக காட்டவே இப்படி செய்கிறார் எனவும் அனிதா சம்பத் குற்றம்சாட்டுகிறார். இருவருக்குள்ளும் நேற்றைய நாளில் வாக்குவாதம் வந்தது குறிப்பிடத்தக்கது. அனிதாவுக்கும் ரேகாவுக்கும் இடையே அப்படி என்ன தான் பிரச்னை? பொறுத்திருந்து பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 4 promo today anitha sampath suresh chakravarthy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X