Bigg Boss Tamil 4 Promo: லேட்டாக ஆரம்பித்தாலும், கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது பிக் பாஸ். முதன்முறையாக நேரடி பார்வையாளர்கள் இல்லாமல் மேடையில், போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
சீரியல், சினிமா நடிகை நடிகர்கள், மாடல்கள், பாடகர் என பதினாறு பேர் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இடம்பெற்றுள்ள ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில், வாத்தி கம்மிங் ஒத்து என்ற விஜய்யின் பாடல் ஒலிக்கிறது. இதற்கு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் எனர்ஜியாக குத்தாட்டம் போடுகிறார்கள். அடுத்த புரோமோவில், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள சொல்லி பிக் பாஸ் கேட்டிருப்பார் போல. அப்போது ஹார்ட் பிரேக் என்று சொல்லி ஷிவானியை குறிப்பிடுகிறார் சனம். நீங்க யார் கிட்டயும் மிங்கிள் ஆகாம தனியா இருக்கிற மாதிரி இருக்கு என்கிறார். ஏன் இப்படி ஒரு ஃபேஸ்? அங்க போய் தனியா உட்கார்ந்துக்குறீங்க? என்கிறார் சுரேஷ். அதற்கு, ”நா மிங்கிள் ஆக கொஞ்சம் டைம் ஆகும்” என்கிறார் ஷிவானி. “நேத்து ஒரு நிமிஷத்துல என் கூட மிங்கிள் ஆனிங்களே?” என்கிறார் சுரேஷ். அடுத்து பேசும் சனம், ”ஒருவேளை வயதிற்கு ஏற்ற படி முதிர்ச்சி இன்மை கூட காரணமாக இருக்கலாம்” என்கிறார். அதற்கு நான் ஒன்னு இங்க பேசணும், ஆனா அதுக்கு ரைட்ஸ் இல்லன்னா நான் பேசல என்கிறார் ஷிவானி. ஆக முதல் நாளிலேயே ஷிவானியை வைத்து பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அடுத்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஹார்ட் பிரேக் ஷிவானி கையில் அதிகமாக இருக்கிறது. அவருக்கு பாலாவும், சோம் சேகரும் ஆறுதல் சொல்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள், ஜாலியா இருங்க என்கிறார்கள். ”நான் எந்த கேம் ப்ளான் ஓடவும் இங்க வரல. எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்றேன்” என்கிறார் ஷிவானி. அடுத்து வெளியான புரோமோவில், ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் டிக் டிக் கேம் விளையாடுகிறார்கள் அப்போது விழுந்து விடுகிறார் நிஷா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”