scorecardresearch

பிக் பாஸ் வேலைய ஆரம்பிச்சிட்டாரு: இந்த வருஷம் இவங்களா?

அவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டும் படி ஆணையிடுகிறார் பிக் பாஸ்.

Bigg Boss Tamil 4 Gabriella Tamil NewsGabriella
Bigg Boss Tamil 4 Gabriella

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பதினாறு போட்டியாளர்களுடன் 17-வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் தஞ்சமடைந்திருக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக இருக்கும் இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து சொல்லவேண்டும் என்கிறார் பிக் பாஸ்.

அப்போது போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை தேர்வு செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் இருவரையும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டும் படி ஆணையிடுகிறார் பிக் பாஸ்.

“பாவம் இந்த பெண்ணை புடுச்சி புடிச்சி எதிலாவது போட்டு விடுறாங்க” என்கிறார் பாலாஜி முருகதாஸ்.

அடுத்து வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் பதவிக்காக வித்தியாச டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக் பாஸ். ரியோ, வேல்முருகன், கேப்ரியல்லா 3 பேரும் கேப்டனுக்கான நாமினேஷனில் இருக்கிறார்கள். ஆதரவாளர்கள் அவர்களை உப்பு மூட்டை ஏத்திக் கொண்டு நிற்க வேண்டும். கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் ஆதரவு தந்து, அவரை உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு நிற்கிறார். வியர்வை வடிகிறது. “வேணாம் தாத்தா ப்ளீஸ் தாத்தா” என்கிறார் கேப்ரியல்லா. ஒரு கட்டத்தில் அவராகவே இறங்கி, “சாரி தாத்தா” என அழுகிறார். “இதுக்கு ஏண்டி சாரி” என அனைத்துக் கொள்கிறார் சுரேஷ்.

3-வது ப்ரோமோவில் கேப்ரியல்லா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க, பாலாஜி அவருடன் பேசுகிறார். ‘அவ்வளவு நேரம் நாம பேசாதது உனக்கு கவலை இல்லைல?’ என கேப்ரியல்லா கேட்க, ‘நாம என்ன ஜோசிய காரங்களாப்பா.. மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ண’ என பாலாஜி பதில் சொல்கிறார். அதற்கு ‘நடிக்காதே’ என்கிறார் கேப்ரியல்லா. ‘நான் யார் கிட்டயும் நடிக்கணும்ங்கற அவசியம் இல்ல. முகத்துக்கு நேரா சொல்லிவிடுவேன்’ என பாலாஜி கூறுகிறார். இவர்களின் பேச்சுக்கு நடுவே ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ’ என்ற பாடலை ஒலிபரப்பவிட்டு, தனது வேலையை தொடங்கி விட்டார் பிக் பாஸ்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 4 promo vijay tv gabriella suresh shivani narayanan archana