By: WebDesk
Updated: October 19, 2020, 03:58:01 PM
Bigg Boss 4 Tamil Archana and Nisha
Bigg Boss Tamil 4 Promo: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ரேகா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அடுத்த வாரம் யாரை வெளியேற்ற வேண்டும் என்பதற்கான நாமினேஷன் இன்று நடைபெறுகிறது.
இது குறித்து வெளியான ப்ரோமோவில், பெரும்பாலான போட்டியாளர்கள் ஆரி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரையும் நாமினேட் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இருவரும் தான் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆரி அட்வைஸ் செய்துக் கொண்டே இருப்பதாகவும், சுரேஷ் சக்ரவர்த்தி கொளுத்திப் போடுகிறார் எனவும் இதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.
இரண்டாவதாக வெளியாகியிருக்கும் புரோமோவில் சுரேஷ் மற்றும் ரியோ இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. Truth or Dare என்ற ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். அதில் சுரேஷ், பாலாஜி, ஆரி, அனிதா சம்பத், ஆஜித் ஆகியோர் போட்டியில் பங்கேற்காமல் மற்றவர்களை பார்த்து கேள்வி கேட்கும் வேலைக் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது ரியோ ஏதோ கேள்வி கேட்க, ’நீங்க எங்களை கேள்வி கேட்க முடியாது. நாங்க தான் கேட்கிறோம்’ என ஆரி சொல்ல, சுரேஷ் உடனே ‘இது எங்க சாய்ஸ்’ என்றார். அதற்கு ரியோ கைதட்டி எழுந்து ‘Well shot sir..’ என சுரேஷை பார்த்து சொல்கிறார். அதற்கு அவர் ‘இவ்வளவு நேரம் தவறு நடந்திருந்தால் மேலே இருப்பவர் அப்போதே சொல்லி இருப்பாரே’ என்கிறார்.
இதனால் கோபமான ரியோ “மேல இருக்கிறவரா சார். வேலையே இல்லையா அவருக்கு. நீங்க எதாவது நோண்டினே இருப்பீங்க. வந்துனே இருப்பாரா அவரு” என்கிறார்.
மூன்றாவதாக வெளியான ப்ரோமோவில், “2 பேருக்கு, நோ கமெண்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்ங்கற டைட்டில கொடுக்கணும். ஏன் பயமா இருக்கா உங்களுக்கு? என நிஷாவை பார்த்து கேட்கிறார் பாலாஜி. “நான் ஏன் பயப்படணும்” என்ற நிஷா வேல் முருகனின் பெயரை சொல்கிறார். கோபமான வேல்முருகன், ‘அமைதியா இருந்தா கெட்டவனா’ என சத்தம் போடுகிறார். அவரை அர்ச்சனா சாந்தப்படுத்துகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”