Bigg Boss Sanam Shetty: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் நான்காம் சீசனில், கலந்துக் கொண்டுள்ள போட்டியாளர்களில் சனம் ஷெட்டியும் ஒருவர்.
பெரியாரிஸ்ட் டூ பாஜக: குஷ்பு பயணித்த அரசியல்
சனம் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்தவர். இப்போது சென்னையை தனது இருப்பிடமாக மாற்றியுள்ளார். பெற்றோருக்கு ஒரே மகளான சனம், பிரபலமான மாடல், நடிகை மற்றும் அழகுப் போட்டியின் டைட்டிலை வென்றவர். ‘அம்புலி’ (பூங்கவனம்) என்ற படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமானார். ‘சதுரம் 2’ (டாக்டர் ப்ரீத்தி), ஸ்ரீமந்துடு (மேக்னா) மற்றும் சிங்கம் 123 (சாந்தினி) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டார்.
‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக, சின்னத்திரையில் நுழைந்தார் சனம். எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரியில் நுழைவதற்கு முன்னர்,தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்தார் சனம் ஷெட்டி.
சனம் ஒரு பன்மொழி வித்தகர். தென்னிந்திய மொழிகளில் சரளமாக அவரால் பேச முடியும். இது அவரது திரைப்பட வாழ்க்கையை சிறந்த முறையில் வடிவமைக்க உதவியது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி.
’மிஸ் சவுத் இந்தியா 2016’ என்ற அழகுப் போட்டியின் டைட்டிலை தன் வசம் வைத்திருக்கிறார் சனம் ஷெட்டி. வெற்றிகரமான மாடலாக வலம் வரும் அவர் பல முன்னணி பிராண்டுகளுடன் பணியாற்றியுள்ளார்.
‘பெயர், புகழுக்காக இங்கு வரவில்லை’ காங்கிரஸில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவிப்பு
தனிப்பட்ட வாழ்க்கையில், சனம் ஷெட்டியும், பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் தர்ஷன் தியாகராஜா ஆகியோர் சிறிது காலமாக உறவில் இருந்தனர். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்பே சனம் – தர்ஷன் ஆகியோரின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சனம் ஷெட்டியை திருமணம் செய்ய தர்ஷன் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, அவர் மீது பல்வேறு காரணங்களுக்காக சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Bigg boss tamil 4 sanam shetty personal life vijay tv bigg boss