scorecardresearch

அக் 4-ல் பிக் பாஸ் தொடக்கம்: அவங்க இடத்துல இவங்களா… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ரம்யா பாண்டியன் முதல் ஷாலு ஷம்மு வரை, நிறைய பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. 

bigg boss, bigg boss season 4, vijay tv, vijay tv bigg boss tamil, ரம்யா பாண்டியம், விஜய் டிவி, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 4, ஷிவானி, actress ramya pandian, actress shivani, ramya pandian will go to bigg boss house, shivani will go to bigg boss house

Bigg Boss Tamil 4 : பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 4 வரும் அக்டோபர் 4 முதல் ஒளிபரப்பவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக  தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதிலிருந்து, போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ரம்யா பாண்டியன் முதல் ஷாலு ஷம்மு வரை, நிறைய பேரின் பெயர்கள் அடிபடுகின்றன.

ரம்யா பாண்டியன்

ramya pandian instagram ramya pandian interview vijay tv
ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் வெள்ளி மற்றும் சின்ன திரைகளில் பிரபலமான முகம். அவர் ‘டம்மி தப்பாசு’ மூலம் அறிமுகமானார். ஆனால் ‘ஜோக்கர்’ மற்றும் ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் தோன்றியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். ‘குக்கு வித் கோமாளிஸ்’ என்ற சமையல் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். தற்போது, ‘கலக்க போவது யாரு சீசன் 9’ என்ற ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜாக இருந்து வருகிறார். போன சீசனில் மதுமிதாவின் இடத்தை இவர் நிரப்பக் கூடும்.

ஷிவானி நாராயணன்

Lead actress of Tamil Serials, shivani
ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன் பிரபல சின்னத்திரை நடிகை. ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர், சினேகா அர்ஜுனாக ‘பகல் நிலவு’ சீரியலில் தனது நடிப்பால் புகழ் பெற்றார். ‘கடைகுட்டி சிங்கம்’, ‘ரெட்டை ரோஜா’ ஆகிய சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு டாக் ஆஃப் த டவுன் ஆகியிருக்கிறார். போன சீசனில் சாக்‌ஷி அகர்வாலின் இடத்தை இவர் நிரப்பக் கூடும் எனத் தெரிகிறது.

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

நடிகை-மாடல் சனம் ஷெட்டி ‘மிஸ் சவுத் இந்தியா 2016’ வெற்றியாளராக இருந்தார். பல்வேறு தென்னிந்திய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் 3-ல் பங்கேற்றவர்களில் ஒருவரான தர்ஷன் தியாகராஜாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஒருவேளை சனம் பிக் பாஸ் 4-ல் கலந்துக் கொண்டால், அவர் போன சீசனில் லாஸ்லியாவின் இடத்தை நிரப்ப வாய்ப்புண்டு.

அர்ச்சனா சந்தோகி

அர்ச்சனா

சின்னத் திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியான அர்ச்சனா, ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். ‘இளமை புதுமை’, ‘சூப்பர் மாம்’, ‘ச ரி க ம பா தமிழ் சீனியர்ஸ் (சீசன் 1 மற்றும் 2)’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியின் கோ-ஜட்ஜாக இருந்துள்ளார். மனதில் பட்டதை பளிச்சென பேசும் வகையில்ன் வனிதா விஜயகுமாரை இவர் நினைவுப்படுத்தலாம்.

ஆரி அர்ஜுனா

ஆரி

ஆரி அர்ஜுனா என்றும் அழைக்கப்படும் ஆரி ஒரு பிரபல நடிகர். தியேட்டர் ஆர்டிஸ்டாக நல்ல அனுபவத்துடன் வருகிறார். ‘ஆடும் கூத்து’ படத்தில் அறிமுகமான அவர், ‘நெடுஞ்சலை’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இப்போது தனது படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். தர்ஷன் இடத்தை இவர் பூர்த்தி செய்யலாம்.

ரியோ ராஜ்

TV Celebrities family function during lockdown
ரியோ ராஜ்

ரியோ ராஜ் மிகவும் பிரபலமான ஆங்கர் மற்றும் நடிகர். ‘கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதையில் அறிமுகமான அவர், ‘சரவணன் மீனாட்சி’ நிகழ்ச்சியில் தனது நடிப்பால் புகழ் பெற்றார். ஒரு தொகுப்பாளராக, ‘சுட சுட சென்னை’, ‘ஃப்ரீயா விடு’, ‘ரெடி ஸ்டெடி போ’, ‘ஒய்ஃப் கைல லைஃப்’ மற்றும் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். கடந்த சீசனில் சாண்டியின் இடத்தை இவர் நிரப்பக் கூடும்.

ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் ரமேஷ்

ரமேஷ் சவுத்ரி என்று அழைக்கப்படும் ஜித்தன் ரமேஷ், பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் மூத்த சகோதரரும் ஆவார். தெலுங்கு திரைப்படமான ‘வித்யார்த்தி’ மூலம் அறிமுகமான அவர், ‘ஜித்தன்’, ‘ஓஸ்தே’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். போன சீசனில் கலந்துக் கொண்ட கவினை இவர் நினைவுப்படுத்தலாம்.

அமுதவாணன்

அமுதவாணன்

அமுதவாணன் மிமிக்ரி திறன்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்விற்கும் பெயர் பெற்றவர். ’கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் பிரபலமானார். ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படத்தில் அறிமுகமானார். நிறைய காமெடி திறன் கொண்ட இவரும் சாண்டியை ஞாபகப்படுத்தலாம்.

அனு மோகன்

அனு மோகன்

அனு மோகன் ஒரு இயக்குனர் மற்றும் நடிகரும் ஆவார். இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அனு மோகன் ஓரிரு படங்களைத் தயாரித்துள்ளார். பின்னர், நடிப்பில் அதிக கவனம் செலுத்தி 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு ஒரு டப்பிங் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல திறமைகளைக் கொண்டுள்ளார். சேரன் போல பக்குவமாக நடத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஜித் காலிக்

ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3’ வெற்றியாளராக அஜீத் காலிக் உள்ளார். இப்போது அவர் ஒரு பின்னணி பாடகர். அதோடு சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். பிக் பாஸ் 3 வெற்றியாளர் முகெனை இவர் நினைவுப்படுத்தக் கூடும்.

கேப்ரியெல்லா சார்ல்டன்

கேப்ரியல்லா

கேப்ரியெல்லா சார்ல்டன் ஒரு முன்னாள் குழந்தை நட்சத்திரம். ஜோடி நம்பர் 1 சீசன் 6 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். ‘7 ஆம் வகுப்பு சி பிரிவு’ சீரியலில் நடித்த இவர், ‘3’, ‘சென்னையில் ஓரு நாள்’, ‘அப்பா’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் அடுத்த அபிராமியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

சஞ்சனா சிங்

சஞ்சனா சிங்

சஞ்சனா சிங் வெவ்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி-யைப் பொறுத்தவரை, கிராமத்தில் ஓரு நாள், அச்சம் தவிர், மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்றுள்ளார். ஆதோடு அவர் ஒரு உடற்பயிற்சி மற்றும் யோகா ஆர்வலர். பிக் பாஸ் 3-யின் ரேஷ்மா இடத்தை இவர் பிடிக்கலாம்.

ஷாலு ஷமு

Shalu Shamu, Bigg boss Tamil 4
ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷமு, மிஸ்டர் லோக்கல் மற்றும் தெகிடி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதோடு இவர் ஒரு டான்ஸரும், தொழில் முனைவோரும் கூட. கடந்த சீசனில் பங்கு பெற்ற மீரா மிதுனை இவர் ஞாபகப்படுத்தலாம்.

வசுந்த்ரா தாஸ்

வசுந்த்ரா தாஸ்

வசுந்தரா தாஸ் ஒரு பிரபல பின்னணி பாடகி, இசையமைப்பாளர் மற்றும் நடிகை. அஜித்குமாருடன் ‘சிட்டிசன்’, கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ போன்ற படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். ஒருவேளை பிக் பாஸில் கலந்துக் கொண்டால், ஷெரீன் இடத்தை அவர் நிரப்ப நிறைய வாய்ப்புண்டு.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 4 shivani narayanan ramya pandian sanam shetty