பிக் பாஸ் ரகசியத்தை போட்டோ போட்டு காட்டிட்டாங்க… குவாரன்டைனில் இருப்பவர்கள் இவர்கள்தான்!

Bigg Boss Tamil 5 Final Contestants Viral Photos Tamil News அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகவில்லை என்றும் உறுதிசெய்யப்பட்டது.

Bigg Boss Tamil 5 Final Contestants Viral Photos Tamil News
Bigg Boss Tamil 5 Final Contestants Viral Photos Tamil News

Bigg Boss Tamil 5 Final Contestants Viral Photos Tamil News : எந்த விவாதங்களுக்கும் ஓர் தேர்வு கிடைத்துவிடும் ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யார் செல்கிறார்கள் என்பதற்கான விவாதத்தின் முடிவு மட்டும் நிகழ்ச்சியின் தொடக்க நாள் வரை பரபரப்பாகவே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் ஒன்று, ‘இவர்கள் நிச்சயம் போகிறார்கள்’ என்கிற வதந்தியை வைரலாகப் பரப்பி வருகிறது.

நான்கு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து ஐந்தாவது சீசன் எப்போதுதான் ஆரம்பிக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது பிக் பாஸ் தமிழ். கொரோனா பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கவேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிபி முத்து முதல் பிரியங்கா வரை ஏராளமான பிரபலங்கள் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்கிற வதந்தி தீயாய் பரவியது.

மேலும், கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சியில் பங்குபெறப்போகும் போட்டியாளர்களை கொரோனா கட்டுப்பாடு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். அதன்படி, நிகழ்ச்சிக்கு முன்பு போட்டியாளர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குப் பலமுறை கொரோனா பரிசோதனை எடுத்து, அதன் முடிவு நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

அந்த வரிசையில், தொகுப்பாளினி பிரியங்கா இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவார் என்று வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ். ஆம், சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் பிரியங்கா. இதனால், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகவில்லை என்றும் உறுதிசெய்யப்பட்டது.

ஆனால், மறுமுனையில் பிக் பாஸ் போட்டியாளர்களாகப் பங்கேற்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்ட சில பிரபலங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஷகீலா மகள் மிலா, செய்தி வாசிப்பாளர் கண்மணி, ஷாலு ஷம்மு, கோபிநாத் ரவி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் அது. இதன்மூலம், அவர்கள் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்கள் என்று விவாதித்து வருகின்றனர் மக்கள். அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 final contestants viral photos tamil news

Next Story
நீங்க ஒல்லியானாலும் அழகுதான்… வரலாற்றுப் படத்துக்காக 20 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரபு!actor prabhu weight lose lot of kilos, actor prabhu, actor prabhu weight lose for ponniyin selvan movie, பிரபு, பொன்னியின் செல்வன், மணிரத்னம், 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த நடிகர் பிரபு, நடிகர் பிரபு, director manirathnam, PS - I, prabhu, prabhu weight lose, manirathnam, tamil cinema, tamil cinema news, ponniyin selvan movie
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X