Bigg Boss Tamil 5 Grand Finale Updates: விஜய் டிவியில் 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ராஜு டைட்டிலை வென்றார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், சின்னபொண்ணு, நமிதா, இசைவாணி, இமான் அண்ணாச்சி, நாடியா, வருண், ஐக்கி பெர்ரி, சிபி, நிரூப், பாவனி ரெட்டி, பிரியங்கா, ராஜு ஜெகன் மோகன், தாமரைச்செல்வி, அக்ஷரா, வருண், அபிநய், அபிஷேக், மதுமிதா, சுருதி என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாமல், சஞ்சீவ், அமீர் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ளே வந்தனர்.
பிக் பாஸ் போட்டி விதிகளின்படி, நமிதா, இசைவாணி, இமான் அண்ணாச்சி, நாடியா, வருண், ஐக்கி பெர்ரி, அக்ஷரா, வருண், அபிநய், அபிஷேக், மதுமிதா, சுருதி, சஞ்சீவ், சிபி, தாமரைச்செல்வி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து 105வது நாள் சனிக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் டிவியில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் ஒளிபரப்பானது. பிக்பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப், ராஜு, அமீர், பிரியங்கா, பாவ்னி 5 பேர் இருந்தனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ரசிகர்களின் ஓட்டு அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட வேண்டும். அதனால், மக்களின் ஆதரவு யாருக்கு, பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ராஜுவும் பிரியங்காவும் மட்டுமே உள்ளே இருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை வெளியே அழைத்து வந்தார். பின்னர், பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜுவை அறிவித்தார். அவருக்கு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலும் 50 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. பிரியங்கா 2வது இடத்தைப் பிடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரியாங்கா, ராஜுவை வெளியே அழைத்து வந்தார் கமல்ஹாசன், பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரை அறிவித்தார். கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வெற்றியாளராக ராஜுவை அறிவித்தார். பிரியங்கா 2வது இடத்தைப் பிடித்தார்.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரியங்கா, ராஜு இருவரையும் கமல்ஹாசன் நேரில் சென்று அழைத்து வந்தார். இன்னும் சில நிமிடங்களில் டைட்டில் வின்னரை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கடைசியாக பிக் பாஸ் வீட்டுக்குள் பாவனி, ராஜு, பிரியங்கா மட்டும் இருந்த நிலையில், பாவனி வெளியே வந்தார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனமும் சோனி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில், இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களில் ஒருவரான அமீர் வெளியேறினார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கிண்டல் செய்து விஜய் டிவியின் கேபிஒய் டீம் கலாய்த்து நடித்து வருகின்றனர். தாமரைச் செல்வி போல விஜயன் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் டைட்டில் கேடயம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது. அதை போட்டியாளர்கள் பாவனி, நிரூப், பிரியங்கா, ராஜு, அமீர் ஆகியோர் தங்கள் கைகளில் எடுத்து தொட்டுப் பார்த்தனர்.
பிக் போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பாவனிக்கு வாட்ச் பரிசாக கொடுக்கப்பட்டது. ராஜுவுக்கு எழுதுவதற்கு பேனா பரிசாக கொடுக்கப்பட்டது. பிரியங்காவுக்கு மைக் பரிசாக கொடுக்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த 104 நாட்களாக நிகழ்சியில் நடந்த நிகழ்வுகளின் நினைவு வீடியோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே தொடங்கியது. போட்டியாளர்கள் கலர்ஃபுல் உடையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தனர். போட்டியாளர்களின் மாஸ் டான்ஸ் உடன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்கியது.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். சிவகார்த்திகேயேன் கலந்துகொண்ட புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களில் ஒருவாரான ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளதாகவும் இது உலகத்தின் முடிவல்ல, இது சினிமா துறையில் நுழைவதற்கான டிக்கெட். அதனால், உங்களுடைய உண்மையான நண்பர்களுடன் பேசுங்கள். அவர்களுடன் இணைந்து முறையான புராஜெக்டை பெறுங்கள். தாமதம் செய்யாதீர்கள். அதிகம் நிபந்தனை விதிக்காதீர்கள் என்று யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி அட்வைஸ் செய்துள்ளார்.
இருப்பினும், பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான ராஜு டைட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனால், பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளார் என்று தெரிகிறது. பிரியங்கா 2வது இடம் என்றும் 3வது இடம் பாவனி, 4வது இடம் அமீர், 5வது இடம் நிரூப் பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.