கமல் ஹாசனின் முதல் பிரேக்… இனி யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்?

Bigg Boss Tamil 5 Kamal Hassan taking break due to Covid positive கொரோனவிலிருந்து மீண்டு வந்தாலும், மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வு அவசியம் தேவைப்படும். இதனால், வரும் வாரங்களின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாத நிலை கமல் ஹாசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Bigg Boss Tamil 5 Kamal Hassan taking break due to Covid positive

Bigg Boss Tamil 5 Kamal Hassan taking break due to Covid positive Tamil News : ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் தாக்கம் அதிகரித்து வந்த வேளையில் தொடங்கியதுதான் பிக் பாஸ் தமிழ். ஏற்கெனவே உலகளவில் ‘பிக் பிரதர்’ எனும் நிகழ்ச்சியை 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஹிந்தியில் தொடங்கினர். இதனை இந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க, தமிழில் கோலாகலமாகத் தொடங்கியது.

புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தாண்டி, முதல் முறையாக சின்னத்திரையில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்புதான் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இப்படி அதிக அளவு எதிர்பார்ப்பில் ஆரம்பமான இந்த பிக் பாஸ் ஷோ, நடிகை ஓவியாவினால் அடுத்தாக கட்டத்திற்கு நகர்ந்தது. ஆர்மி, எவிக்ஷன் போன்ற வார்த்தைகளை நம் அன்றாட வாழ்வில் அதிகம் கேட்க நேர்ந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு சீசன்களாக புயல், மழை, கொரோனா உள்ளிட்ட பல்வேறு தடைகள் இருந்தாலும் எனத ஒரு தடையுமின்றி இந்நிகழ்ச்சி வெற்றிபெற்று ஓடியது. அதிலும், வார இறுதியில் கமல் ஹாசன் வரும் எபிசோடுகளை மட்டுமே பார்க்கும் கும்பலும் இருந்தன. இதுவரை இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட கமல்ஹாசன் விடுப்பு எடுத்ததில்லை. ஆனால், இந்த ஐந்தாவது சீசனில் முதல் முறையாக கமல் ஹாசனுக்கு பிரேக் வரப்போகிறது.

ஆம், கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல் ஹாசன், குறைந்தது 2 வாரங்களாவது வெளி உலகிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனவிலிருந்து மீண்டு வந்தாலும், மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வு அவசியம் தேவைப்படும். இதனால், வரும் வாரங்களின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாத நிலை கமல் ஹாசனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சீசனில் கொரோனா பரவல் அதிகம் இருந்த காரணத்தினால், வீடியோ அழைப்பு மூலமாகத்தான் பொது மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், இம்முறை சில பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இனி கமல் ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கினாலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்குமா என்பது சந்தேகம்தான். இன்னும் 7 வாரங்கள் இருக்கும் நிலையில், கமல் ஹாசன் மீண்டு வர 4 வாரங்களாவது  ஆகும்.இந்நிலையில், இந்த நிகழ்ச்சியினை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்விதான்  அனைவரிடத்திலும் தற்போது எழுந்துள்ளது. கமல் மகள் சுருதி ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு இருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லது வீடியோ அழைப்பு மூலம் அவரே தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கமல் ஹாசன் விரைவில் மீண்டு வரப் பிரார்த்திப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 5 kamal hassan taking break due to covid positive

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com